நஜீப்
நன்றி:11.01.2025 ஞாயிறு தினக்குரல்
தமிழரசுக் கட்சி சம்பந்தன் மற்றும் மாவை காலங்களில் சட்டவல்லுணர் சுமந்திரன் கட்டுப்பாட்டில்தான் இருந்து வந்தது. அவர் மக்களால் நிராகரிக்கப்பட்டாலும் அவர் கட்சியில் மிகவும் வலுவாக இருக்கின்றார். இன்று கட்சி நிருவாகம் அவரது கைகளில் இருக்கின்றது.
இதனை வைத்து தலைமைக்குத் தெரிவாகி இருந்த சிரிதனைக் கூட தன்னால் பந்தாடமுடியும் என்பதனை சட்டவல்லுணர் காட்சிப்படுத்தி வருகின்றார்.
பொறுப்புள்ள நிருவாகிகள் தொண்டர்கள் இந்த விவகாரத்தை இவர்களின் தனிப்பட்ட ஆதிக்கப்போட்டி என்று இன்னும் எவ்வளவு காலத்துக்கு வேடிக்கை பார்க்கப் போகின்றார்கள் என்பதனை வடக்குக் கிழக்குத் தமிழ் மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
சுமந்திரனை நல்ல சட்டவல்லுணர் என்று எடுத்துக் கொண்டாலும் அது தமிழர்களின் விமோசனத்துக்கு எந்தளவுக்கு உபயோகிக்கப்பட்டிருக்கின்றது என்பதில் நிறையவே தெளிவில்லாத நிலமைகளை அங்கு அவதானிக்க முடிகின்றது.
இந்தக் குழப்பத்தை பாவித்து பலயீனமான அரசியல் சக்திகள் உள்ளே நுழையக் கூடும்.





