சார்ள்ஸ் ஓர் உளவாளி!

-நஜீப்-

ஒரு காலத்தில் சிறந்த நிருவாகி என்ற பெயர் வாங்கிய PSM.சார்ள்ஸ் மாகாண ஆளுநராக இருந்து அதனை விட குறைவான தரத்திலான தேர்தல் ஆணைக்குழு உறுப்பினராக நியமனம் பெற்றது அனைவரும் அறிந்த கதை.

தீர்க்கமான ஒரு நேரத்தில் ஆணைக்குழு உறுப்பினராக தான் வகித்த பதவியிலிருந்த அதிரடியாக வெளியேறி நாட்டில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருந்தார் அவர். ஆனால் இவர் அந்தப் பதவியில் உருப்படியாக எந்தக் கடமைகளையும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு தற்போது எழுந்திருக்கின்றது.

அவர் இந்தப் பதவியில் இருந்து ஜனாதிபதி ரணிலுக்கு அங்கு உளவு பார்க்கின்ற வேலையைத்தான் செய்து கொண்டிருந்தார் என்று உறுதிபடத் தெரிவிக்கின்றார் செல்வாக்கு மிக்க தேர்தல் கண்காணிப்பக நிறைவேற்று அதிகாரி மஞ்சுல கஜநாயக்க.

தேர்தல்கள் தொடர்பாக நாம் பல இடங்களுக்குப் போய் வந்த போது ஏனைய உறுப்பினர்கள் எம்மோடு பல சந்தர்ப்பங்களில் இணைந்து கொண்டு செயலாற்றி இருந்தனர். ஆனால் இந்தப் பெண் அப்படியான எந்த பணிகளிலும் எம்மோடு  ஒரு சந்தர்ப்பத்திலேனும் இணைந்து கொள்ளவில்லை என்றும் மஞ்சுல மேலும் குற்றம் சாட்டுகின்றார்.

நன்றி: 05.03.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

காமினி அரசியல் கலாச்சாரம்!

Next Story

11 நிமிட நடைப்பயிற்சி அகால மரண ஆபத்தைக் குறைக்கும் - ஆய்வு