நஜீப்
நன்றி: 14.06.2026 ஞாயிறு தினக்குரல்
தற்போது ஈஸ்டர் தாக்குதலுக்கு எதிரான விசாரணைகள் நம்பிக்கை தரும் வகையில் நகர்கின்றன. இதற்கு பிரதான காரணம் என்பிபி அரசு அதிகாரத்துக்கு வந்து. இது தவிர சானி அபேவிக்கிரம போன்ற அதிகாரிகளின் தியாகங்களும் செயல்பாடுகளும் பக்க துணையாக அமைந்திருக்கின்றன.
ராஜபக்ஸாக்கள் மற்றும் அவர்களது கையாளான ரணில் போன்றவர்கள் விசாரணைகளை மூடிமறைக்க எடுத்த முயற்சிகளை நாடு அறியும். சானி, திலிப பீரிஸ் போன்ற அதிகாரிகள் வெற்றிகரமாக விசாரணைகளை முன்னெடுத்துச் செல்வதால் குழை நடுங்கிப் போய் இருக்கும் குற்றவாளிகள்.
இப்படியான அதிகாரிகள் மீது கொலைவெறியில் இருக்கின்றார்கள். எனவே சானியை விசாரணையிலிருந்து நீக்குமாறு குற்றவாளிகளும் அவர்களின் கையாட்களும் அடம் பிடிகின்றார்கள். கோட்டா ஆட்சியில் சானி பலிவாங்கப்பட்டதும் தெரிந்ததே.
இதனால் இப்படியான அதிகாரிகளுக்கு உயிராபத்துக்கள் இருக்கின்றன. எனவே அவர்களைப் பாதுகாக்க அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என பல்வேறு மட்டங்களில் கோரிக்கைகள் விடுக்கப்படுகின்றன.




