சர்வதேசம் கைவிரிப்பது ஏன்.?

-நஜீப்-

இலங்கை தெளிவான அரசியல் பொருளாதாரக் கொள்கைகளை வடிவமைத்துக் கொள்ளாத வரை நாம் புதிதாக கடன்களை வழங்குவது தொடர்பான எந்தத் தீர்மானங்களுக்கும் வரவில்லை என உலக வங்கி அறிவித்திருக்கின்றது.

ஆனால் நமது அரசியல்வாதிகள் உலக வங்கி, ஐஎம்எப் கடன்களை அள்ளித் தரப்போகின்றது நாம் பேச்சுவார்த்தைகளை வெற்றிகரமாக நடாத்தி இருக்கின்றோம் என்று சொல்லி இருந்தார்கள்.

ஆனால் அப்படி எந்த நம்பிக்கையான பதில்களும் அவர்கள் நமக்குத் தரவில்லை. நமது அரசியல் வாதிகளின் பசப்பு வார்த்தைகளை எவரும் நம்பக் கூடாது.

ஒரு குடும்பம் தொடர்ந்தும் பக்கத்து வீடுகளை சாப்பாட்டுக்கு நம்பி இருப்பது போலத்தான் அரசு நிலை இருக்கின்றது.  வருமானத்துக்கு எந்த மார்க்கமும் இல்லாத குடும்பம் தெருவில் நின்று பிச்சை வாங்குகின்ற நிலைதான் அரசுக்கு.

கோட்டா-ரணில் அரசாங்கத்தை ஒரு ஸ்திர அரசாங்கம் என்று சர்வதேசம் கருதவில்லை. எனவே கடனும் இல்லை.!

நன்றி: ஞாயிறு தினக்ககுரல் 29.05.22

Previous Story

ஸஹ்ரான் மனைவிக்கு தமிழில் ஆவணங்கள்!

Next Story

வாழைப்பழம்: ஜாக்கிரதை!