சர்ச்சைக்குரிய மத போதகர் ஜெரோம் மகிந்தவிற்கு நெருக்கமானவரா..?

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் அண்மையில் மதத்தை குறித்து பேசி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோ ஆகியோரின் புகைப்படமொன்றை உள்ளடக்கி இந்த பதிவு அமைந்துள்ளது.

அந்தப் பதிவில், உலகின் மிகப் பெரும் இரு வியாபாரங்களாவன அரசியலும், மதமுமாகும். இடது பக்கம் இருப்பவர் மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோ,  இலங்கையில் கறுப்புப் பணத்தைச் சலவை செய்வதில் வளர்ந்து வரும் நபராவார்.

சர்ச்சைக்குரிய மத போதகர் ஜெரோம் மகிந்தவிற்கு நெருக்கமானவரா..! | Pastor Jerome Fernando

உலகின் பெரிய கறுப்புப் பணச் சேவையாளர்

அண்மையில் இந்த நபர் பௌத்தர்களுக்கு எதிராகக் கருத்து வெளியிட்டவராவார். நடுவில் உயரமாக இருப்பவர் மத போதகர் யூபர்ட் ஏஞ்சல், உலகின் பெரிய கறுப்புப் பணச் சேவையாளர். இந்த நபரின் செயற்பாடுகள் அண்மையில் அல்ஜசீரா தொலைக்காட்சியில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் சால்வை அணிந்த நபரை அறிமுகப்படுத்த வேண்டியதில்லை எனவும் அந்த பதிவில்குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவானது தற்போது சமூக வலைத்தளங்களில் பல்வேறு சந்தேகங்களுடனான கேள்விகளுடன் பகிரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous Story

ச்சிங் ஷி: பாலியல் தொழில், தகாத உறவுக்கு பேர் போன சீன கடல் கொள்ளை ராணியின் 200 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு

Next Story

அரசுக்குள் நடப்பவை சண்டையா நாடகமா!