சம்பந்தன் சட்டவல்லுனர் லடாய்!

நஜீப்-

TNA splits, new alliance emerges for local polls – Sri Lanka Mirror – Right to Know. Power to Change

தமிழ் அரசியல் களத்தில் இன்று முக்கிய பேசு பொருள் சம்பந்தன் ஐயா. சமூக நலன் கருதி பெரியவர் ஓய்வெடுப்பதும் அந்த இடத்திற்கு செயல்திறன் மிக்க ஒருவர் பதவிக்கு வருவதும் ஏற்புடையது என்பது நமது வலுவான கருத்து. இதற்கிடையில் பெரியவர் மீது பெரும்பாலானவர்கள் ஆதரவு இருக்கின்றது என்றும் கதைகள்.

Crossing Red Lines: The New Tamil Consensus in Sri Lanka – Groundviews

பெரியவரின் சகலவகை பலயீனங்களளைப் பாவித்து ஏற்கெனவே அரசியல் காய் நகர்த்தியவர்தான் இந்த சட்டவல்லுனர். அவர்தான் சம்பந்தன் தீர்மானங்களில் மையப் புள்ளியாக செயலாற்றியவரும். இதனைத் தமிழர்கள் அறிவார்கள்.

இன்று சட்டவல்லுனர் திடீரென பெரியவருக்கு எதிரான ஊடகங்களில் இசுவை எடுத்து விட்டது தொடர்ப்பில், ஆள் தலைமைப் பதவியை குறிவைக்கின்றார் என்றும் குற்றச்சாட்டு. ஆனால் தமிழர்களின் அரசியல் கனவுகளுக்கு சட்டவல்லுணர் எந்தளவு பொறுத்தமானவர் என்பதில் எமக்கு நிறையவே சந்தேகங்கள்.

Tamil parties decide to walk out of talks with President if demands aren't met within seven days

கடந்த தேர்தலில் இவர் ராஜபக்ஸாக்களுக்கு விசுவாசமாக பேசி மூக்குடைபட்ட சந்தர்ப்பங்களும் நிறையவே இருந்திருக்கின்றன. ரணில் இனப்பிரச்சினைக்கு தீர்வுதர முடியாது-தரமாட்டார் என்று தெரிந்து கொண்டும் அதில் சம்பந்தனை நம்பிக்கை ஊட்டி-ஈடுபடுத்தி ஏமாற்றியதிலும் அவருக்கு நிறையவே பங்கு.

தமிழ் சமூகத்தின் இன்றைய தேவை இனத்தின் மீது விசுவாசமுள்ள ஆளுமை மிக்க துடிப்பான ஒரு தலைமைத்துவமே.

நன்றி: 05.11.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

காஸாவில் போர் இடைநிறுத்தம்?

Next Story

காசா மீது அணுகுண்டு!  இஸ்ரேல் அமைச்சர் !