சம சமாஜ தலைவர் ஓட்டம்!

நஜீப்-

இலங்கை அரசியல் வரலாற்றில் மிகவும் பழைமையான ஒரு கட்சிதான் சம சமாஜக் கட்சி. 1935ல் துவங்கிய இந்த இடதுசாரி அமைப்பு அன்று நாட்டில் மிகவும் செல்வாக்கான அரசியல் கட்சியாக செலாற்றி வந்திருக்கின்றது.

லெஸ்லி குனவர்தன, என்.எம்.பெரோரா, கொல்வின் ஆர் டி சில்வா என்போர் அதன் சிறந்த தலைவர்களாக செயலாற்றி வந்திருக்கின்றார்கள். அண்மையில் இந்தக் கட்சியின் அங்கத்தவர்கள் ஒன்று கூடி தற்போது அதற்குத் தலைமைத்துவம் கொடுக்கும் பேராசிரியர் திஸ்ஸ விதாரனவை செயலாளர் பதவியில் இருந்து நீக்கி விட்டு புதியவர் ஒருவரை நியமிப்பதற்கு ஏற்பாடுகளை செய்த போது, திஸ்ஸ கட்சி தலைமையகத்திற்கு சீல் வைத்து விட்டு தலைமறைவாகி இருக்கின்றார்.

கட்சிக்காரார்கள் திட்டமிட்டபடி கூட்டத்தை ஸ்டார் அச்சகத்தில் நடாத்தி 23 க்கு 13 என்ற கணக்கில் திஸ்ஸவை வெளியேற்றித் தீர்மானம் போட்டிருக்கின்றார்கள். அவர்கள் தற்காலிக் செயலாளராக ருவன் அபேசிங்ஹ என்பவரை நியமித்த பின்னர் தலைமையகத்துக்குப் போய் கதவையும் திறந்திருக்கின்றார்கள். அது இப்போது லடாயாக மாறி அங்கு குழப்பங்கள் நடந்து வருகின்றது.

நன்றி: 30.04.2023 ஞாயிறு தினக்குரல்

 

Previous Story

பொன்னியின் செல்வன்-2

Next Story

சதாம் ஹுசேனின் 'குவைத் தாக்குதல் திட்டம்' அவருக்கு எதிராகவே திரும்பிய வரலாறு