சப்ரி மிரட்டலும் உருட்டலும்!

-நஜீப்-

அண்மையில் ஐ.நா. மனித உரிமைகள் அமர்வில் இலங்கை மீது முன்வைக்கபட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக நமது வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆற்றிய உரை மிரட்டலும் உருட்டலும் கலந்ததாக இருந்தது என்பதுதான் நமது அவதானம்.

இந்த பிரேரணையில் நாம் தோற்றுப் போனாலும் வெற்றி பெற்றாலும் நாம் இங்கு முன் மொழியப்பட்ட கருத்துக்களை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று அங்கு உறுதியாக சொல்லி இருக்கின்றார்.

அவரது இந்தக் கருத்தக்கள் மேற்கத்திய நாடுகளுக்கு பெரும் நம்பிக்கை இன்மையை ஏற்படுத்தி விட்டிருக்கின்றது.

நாடு உயிர் வாழ அவர்கள் உதவியை எதிர்பார்த்திருக்கின்ற இந்த நேரத்தில் இந்தக் கடும் தெனியிலான கருத்துக்கள் நெருக்கடியை உண்டு பண்ணும் என்று ஜனாதிபதி ரணில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்பரி விவகாரத்தில் கடுப்பில் இருப்பதாகவும் அடுத்த அமைச்சரவை மறுசீரமைப்பில் ஆளைத் தூக்க இருப்பதாகவும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

ஆனால் சப்ரி விடயத்தில் அவரது கருத்துக்களை மொட்டு அணி பாராட்டுகின்றது எனவே ரணில் சப்ரி மீது கை வைத்தால் அங்கு கலவரம்தான்.

நன்றி: 25.09.2022 ஞாயிறு தினக்குரல்

 

Previous Story

இன நல்லிணக்கம்

Next Story

முதல் ஆஸ்கர் விருது