சப்ரி ஜனாதிபதிக்கு பாடம்!

நஜீப்

மே 9 சம்பவத்துக்குப் பின்னர் ஆளும் தரப்பு நாடளுமன்ற உறுப்பினர் கூட்டம் ஒன்று  ஜனாதிபதி தலைமையில்  நடந்தது. அங்கு தங்களது இழப்புகள் பற்றி கடும் ஆதங்கங்கள் வெளிப்பட்டன. பொலிஸ், இராணுவத் தளபதிகள் குறித்து கடும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட அவர்கள் அங்கு அழைக்கப்பட்டனர்.

இரணுவத் தளபதி நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவது ராணுவம் பார்க்கின்ற வேலையல என்று ஜனாதிபதிக்கு சுட்டிக்காட்டினார் இராணுவத் தலைவர். பொலிஸ் மா அதிபர் 184 பேருக்கு ஓஐசி பதவி வழங்கப்பட்டிருக்கின்றது. அதில் 126 பேருக்கு நேர்முகப் பரீட்சை கூட நடக்கவில்லை.

அரசியல்வாதிகளின் சிபார்சுக்கு அமைய அவர்கள்தான் இந்தப் பொலிஸ் நிலையங்களுக்குப் பொறுப்பாக இருக்கின்றார்கள். இதனை நான் அப்போதே எதிர்த்தேன் என்று பதில் கொடுத்தார் பொலிஸ் மா அதிபர்.

எவரும் அதற்குப் பதில் கொடுக்கவில்லை. அப்போது அலி சப்ரி இதன் பின்னர் எக்காரணம் கொண்டும் சட்டத்துக்கும் சுறுநிருபங்களுக்கும் மாற்றமாக தீர்மானங்களை எடுக்க வேண்டாம் என்று ஜனாதிபதிக்கு உபதேசம் பண்ணினார்.

நன்றி: ஞாயிறு தினக்ககுரல் 22.05.22

Previous Story

'ட்வெல்த் மேன்' (12th Man) தரமில்லாத திரைக்கதை!

Next Story

நாட்டுக்குப் பொய் சொன்ன ரணில் வீட்டுக்கு...!