சதி1962

1962.01.27

இரவு 5.30 TO 9.30

-கே எஸ் பெரேரா-
கைது செய்யப்பட்டு சிறிதுநேரம் தொடர்பின்றி தடுத்து வைக்கப்படவிருந்தவர்களில் ஒருவர் பதில்கடற்படை தளபதி ராஜன் கதிர்காமர். 27 ம் திகதி காலை பிரதி பொலிஸ் மா அதிபர்- சிசி திசநாயக்க தனது அதிகாரிகள் சிலரை தனது அலுவலகத்தில் சந்தித்து அவர்களிற்கு வெவ்வேறு பணிகளை வழங்கினார்.
அவருக்கு விசுவாசமான இருவரிடம் ராஜன் கதிர்காமரை கைதுசெய்வதற்கான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அன்றிரவு அரசாங்கத்தை கைப்பற்றுவதற்கான திட்டம் குறித்து விபரித்த அவர்கடற்படை தளபதிக்கான சங்கேத சொல் கொமோ என தெரிவித்தார்.
கடற்படை தளபதி உறங்கியதும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது என தீர்மானிக்கப்பட்டது. அதற்கான குறியீட்டு சொல் என சிசி தெரிவித்திருந்தார்.
27ம் திகதி இரவு அலரிமாளிகைகதிர்காமர் துப்பாக்கியுடன் நீலநிற சீருடையுடன் அலரிமாளிகையின் தாழ்வாரங்களில் காணப்பட்டார். அலரிமாளிகையை சுற்றி ஏற்கனவே பாதுகாப்பு வலயமொன்று உருவாக்கப்பட்டிருந்தது.அலரி மாளிகையில் கடும் பதற்றம் நிலவியது,சதிப்புரட்சி தொடர்கின்றதா இல்லையா என்பது குறித்து எவருக்கும் தெரியாத நிலை காணப்பட்டது.
60 வருடங்களிற்கு முன்னர்- அதாவது1962 ஆம் ஆண்டு ஜனவரி 27 ம் திகதி இரவு 5.30 முதல் 9.30 வரையிலான காலப்பகுதி நாட்டின் தலைவிதியை நிர்ணயித்த விடயங்களில் மிகவும் முக்கியமானதாக இலங்கை வரலாற்றில் பதியப்படும்.
இரண்டு தரப்புகள் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தன. மக்களால் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தை சதிப்புரட்சி மூலம் வீழ்த்துவதற்காக சதித்திட்டத்தை தீட்டி நடைமுறைப்படுத்துவதற்கு ஒருதரப்பு முயற்சிகளை மேற்கொண்ட வண்ணமிருந்தது-அதற்கான இறுதி முயற்சிகளில் அந்த தரப்பு ஈடுபட்டுக் கொண்டிருந்தது.
அதேவேளை அரசதரப்பினர் பேராபத்தை உணர்ந்து அதனை தடுப்பதற்கான திட்டங்களை வகுப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். இரு தரப்பினரும் முக்கிய பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டனர்-கொழும்பில் வெவ்வேறு மூன்று இடங்களில் அவர்கள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர்.
அதிகாரம்மற்றும் பதவியை இழப்பது குறித்த உணர்ச்சியால் உந்தப்பட்ட சில சிரேஸ்ட அதிகாரிகளும் பொலிஸ் அதிகாரிகளும் ஜனநாயகரீதியில் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்திடமிருந்து தேசத்தை கைப்பற்ற திட்டமிட்டனர்-
அரசியல்வாதிகள் தவறான நிர்வாகத்தின் மூலம் நாட்டை சீரழிக்கின்றனர் என்பதே அவர்கள் முன்வைத்த குற்றச்சாட்டு. ஒப்பரேசன் ஹோல்ட்பாஸ்ட் என பெயரிடப்பட்ட அந்த சதி முயற்சி சில மணித்தியாலங்களே நீடிக்கவேண்டும் என திட்டமிடப்பட்டிருந்தது.
தனது கணவரின் கொள்கைகளை தொடர்ந்து ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க பலவீனமான அனுபவமற்ற ஆட்சி புரிவதற்கு தகுதியற்றவர் என கருதப்பட்டார். 27 ம் திகதி அவரை கைதுசெய்ய திட்டமிட்டிருந்தனர்.
எதிர்தாக்குதலை எதிர்கொள்வதற்கு கொழும்பினை கைப்பற்றுவதே முக்கியமான நடவடிக்கை என கருதப்பட்டது. பத்து பதினொரு மணிக்குள் ( காலை) அலரி மாளிகையின் தொண்டர் படையின் பிரதி தளபதி கேர்ணல் எப் டி சி சேரம் குயின்ஹவுஸ் சிசியுடன் இணைந்து டேக் போஸ்ட் உத்தரவை பிறப்பிக்கவேண்டும்.
முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் சிட்னி டி சொய்சா களப்படை தலைமையகத்திலிருந்து இராணுவம் மற்றும் பொலிஸ் நடைமுறைகளை ஒருங்கிணைப்பார். இராணுவ தலைமையகத்தை மொறிஸ்டிமெல் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவார்.
அனைத்து முக்கிய வீதிகளிலும் உள்ள முலோபாய ரீதியில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடங்களில் இருந்து நபர்களை வெளியேற்றுவார்- ஏஎஸ்பி ஜோன்பிள்ளை. தலைமை தபால் அலுவலகம் – டெலிகிராவ் எக்சேஞ் ஆகியன மூடப்படும்.
டைம்ஸ்; ஒவ்சிலோன்-லேக்ஹவுஸ் மற்றும் ரேடியோ சிலோன் ஆகியன கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படும்.

Previous Story

யாருக்கும் தெரியாத பிரபாகரன் கதை!

Next Story

பாணந்துறை சூடு: அதிர்ச்சி தகவல்கள்!