சஜித்-ஹக்கீம் கூட்டணி முறிவு!

நஜீப்-

நன்றி 10.11.2024 ஞாயிறு தினக்குரல்

தேசிய மக்கள் சக்தியுடன் பல தனித்துவத் தலைவர்கள் கூட்டணி போட்டுத் தேர்தலில் நிற்க்கின்றார்கள். ஆனால் அந்த கூட்டணி போட்ட தலைவர்கள் தேர்தலுக்கு முன்பிருந்தே கூட்டணியை முறித்துக் கொண்டு செயலாற்றுவது பகிரங்கமாகத் தெரிகின்றது.

அனுர எனது நல்ல நண்பர் அவர் வெற்றி பெற்றால் நான் அவர் அமைச்சரவையில் இருப்போன் என்று ஒரு முறை ஊடகங்களுக்குச் சொல்லி இருந்தார் மனோ. அதே போன்று எங்களை அழைத்தால் நாமும் கூட்டணிக்குத் தயார் என்று தனித்துவ முஸ்லிம் தலைவர்களும் கூறி வருகின்றனர்.

ஒரு படி மேலே சென்ற மட்டக்ளப்பு மு.கா. தலைமை வேட்பாளர் ஹிஸ்புல்லாஹ் மக்கள் மத்தியில் பிரசாரங்கள் செய்யும் போது இப்படிப் பேசி வருகின்றார். நாங்கள் எப்போதாவது எதிர்க் கட்சியில் அமர்ந்திருக்கின்றோமா? நாம் என்றுமே ஜனாதிபதி கட்சி-பக்கம்தான். இதுதான் நமது அரசியல்!

அதே போன்றுதான் இன்றும். எனவே எங்களை மக்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும். நாம் ஜனாதிபதி அனுரவுடன் இணைந்து உங்களுக்கு பணியாற்றத் தாயர் என்று மேடைகளில் முழங்கி வருகின்றார் கலாநிதி. ஐமச. முகாவுடன் போட்ட கூட்டணி முறிந்து விட்டதைத்தான் இது காட்டுகின்றது. எனவே சஜித் ஆதரவாலர்கள் இது பற்றிச் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.

 

Previous Story

டாக்டர் சாபி வழக்கு தரும் பாடம்!

Next Story

மு.கா.செயலாளர் வீட்டில் ஜனாதிபதி!