கோட்டாவின்  மூவர் ஓட்டம்

முன்னதாக அரசாங்கத்திற்கு ஆதரவினை வழங்கியிருந்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் இனி அரசாங்கத்தை ஆதரிக்க போவதில்லை என தெரிவித்துள்ளனர்.

அதன்படி, பாராளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசிம், இஷாக் ரகுமான் மற்றும் எம்.எஸ் தௌஃபீக் ஆகியோர் இனி அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதில்லை என தீர்மானித்துள்ளனர்.

அமைச்சுக் கிடைக்காத ஆதங்கத்திலா அல்லது யாதர்த்தத்தை புரிந்து கொண்டா இந்த பல்டி என்று நாம் கேட்கத் தோன்றுகின்றது. எப்படியும் சந்தேகத்துடனேனும் நாம் இந்த இந்த பல்டியை வரவேற்கலாம். இஷாக் ரஹ்மான் அமைச்சுக் கிடைத்தது நான் நிராகரித்திருந்தேன் என்றும் சொல்லி இருந்தது தெரிந்ததே.

தற்போது ஆளும் தரப்பு பெரும்பான்மைக்கு ஆபத்து வந்திருக்கின்றது. என்றாலும் அவர்களில் பல்வேறு கொள்கை முறன்பாடுகள் இருப்பது ஆபத்தானது.

உதாரணத்துக்கு விமல் தரப்பு மஹிந்த விலக வேண்டும் என்றும், சஜித் மற்றும் ஏனையோர் ஜனாதிபதி கோட்டா விலக வேண்டும் என்றும் கருதுகின்றனர். விமல் தரப்பினர் நாமலை பிரதமராக்கி அரசியல் செய்யும் இரகசிய எதிர்பார்ப்பில் இன்றுவரை இருக்கின்றார்கள்.

Previous Story

கோழைத்தனமான செயல்: சனத் ஜெயசூர்ய

Next Story

அமைச்சர் நசீர் அஹமதுக்கு எதிராக  SLMC போர்க் கொடி