கொதிக்கின்ற வடக்கு கிழக்கு!

நஜீப்

வரலாற்றில் என்றுமில்லாத அரசியல் கூட்டணிகள் நாட்டில் தோன்றி வருகின்றன. அத்துடன் அரசியல் ஆதரவாலர்களும்  சிதறிப் போய் இருப்பதும் தெரிகின்றது. தெற்கில் மட்டுமல்ல வடக்கு மற்றும் கிழக்கிலும் அரசியல் களம் தேர்தலால் கொதித்துப் போய் இருக்கின்றது.

நமது ஆரம்பக் கணிப்புப்படி தெற்கில் முக்கோணப் போட்டி நிலை  தெரிகின்றது. வடக்கு கிழக்கிலும் இது வரை தமது கோட்டையாக வைத்திருந்தவர்களுக்கும் நல்ல சவால்கள். புதிய கூட்டணிகள் அங்கு முனைப்புடன் செயலாற்றி வருவதையும் நாம் பார்க்க முடிகின்றது.

இந்தத் தேர்தல் முறையில் சுயேட்சைக் குழுக்கள் மூலம் உறுப்பினர்களை வென்றெடுக்க முடியும் என்பதனை அரசியல் செயல்பாட்டாளர்கள் தெரிந்து வைத்திருப்பதால் பல குழுக்கள் களத்தில் இறங்கும்.

திட்டமிட்ட படி தேர்தல்  நடக்குமாக இருந்தால் தெற்கில்  ஆளும் ரணில்-ராஜபக்ஸ அணி பெரும் சவாலை எதிர் நோக்குவது போல வடக்குக் கிழக்கில் பெரியவர் சம்பந்தர் தலமையிலான அணிக்கும் நிறையவே சவால்கள் இருப்பதும் தெளிவாகத் தெரிகின்றது.

நன்றி: 15.01.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

சுன்னத்  சடங்கை கிறிஸ்தவர்கள் கைவிட்டது ஏன்?

Next Story

உழைப்பை நம்பும் சிராஜ்: பேட்ஸ்மேன்கள் பயப்படுவது ஏன்?