குறுந் திரைப் படங்களுக்கு நடிகர்கள் கதைகள் தேவை   

             -எம்.என்.எம்.அசீம்-

சமூக விழிப்புணர்வுக்கான குறுந் திரைப் படங்களை தயாரித்து வெளியிடுவதற்கான ஏற்பாடுகளை உடதலவின்ன ஊடகக் கூட்டணியின் சமூக ஊடகப் பிரிவு தற்போது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

அதில் நடிப்பதற்கு ஆர்வமுள்ள சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலானவர்களிடத்தில் தற்போது விண்ணப்பங்கள்  கோரப்பட்டுள்ளன.

5 வயதுக்குக் குறைவான சிறுவர்கள் தங்களது பெற்றோர்கள் அல்லது சட்டபூர்வமான பாதுகாவலர் ஊடாகவும், பாடசாலை மாணவர்களாயின்  ஒரு பொறுப்பாசிரியர் ஊடாகவும் இதற்கு விண்ணப்பிக்க முடியும். வளர்ந்தவர்கள் நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம்.

இதில் நாட்டம் உள்ளவர்கள் 2023 ஜனவாரி 28ம் திகதிக்கு முன்னர் (+94)705282482 என்ற தொலைபேசி இலக்கத்துடன் (மாலை 4.30 க்கும் 6.00 மணிக்குமிடையில்) தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.

அத்துடன் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடிய  குறுந் திரைப் படங்களுக்கான கதைகளும் எதிர்பார்க்கப் படுகின்றன. இதற்கான கதைகள் 10 முதல் 15 நிமிடங்கள் வரை மட்டுப்பட்டதாக அமைதல் வேண்டும். அவை சமூகத்தில் புரையோடிப்போயுள்ள பிரச்சினைகளைப் பேசுபவையாகவும் இருத்தல் வேண்டும்.

கதாசிரியர்கள் தங்களது கதைகளை

‘குறுந் திரைப் படம்’ யூ.எம்.ஏ. சமூக ஊடகப் பிரிவு மடிகே உடதலவின்ன கண்டி- ஸ்ரீ லங்கா (‘SHORT FILM’ UMA-SOCIAL MEDIA UNIT  31/7,MADIGE  UATALAWINNA. KANDY – SRI LANKA ) என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க முடியும்

Previous Story

இனி பெண்கள் படிக்கவே கூடாது.. மூடப்பட்ட பல்கலை. கதவுகள்..  கதறி அழும் பெண்கள்!

Next Story

2023ல் ஆரம்ப பிரிவுக்கு தவணை பரீட்சை கிடையாது!