நஜீப்
நன்றி:01.03.2026 ஞாயிறு தினக்குரல்
1.பௌத்த சாசனத்தக்கு பிள்ளைகளை கொடுக்கின்றவர்களுக்கு 1000 வீடுகள் இலவசம்-ஜனாதிபதி. அப்போ சிறுபான்மை சமயப் பணிகளுக்கு ஏதும்.?
2.திலித் கட்சி முஸ்லிம் பிரிவுக்கு சர்வஜன இஹ்வான் என்று பெயர் வைத்திருக்கின்றார்கள். இந்தப் பெயரை சிபார்சு பண்ணியதும் ஒரு கோடாரிக்காம்பாம்!
3.இஸ்ரேலுக்கு தொழிலாளர்களை பயிற்றுவிக்கும் நிலையத்தில் நடந்த சமந்தபத்ர தேரர் பிறந்த தினத்தில் பாலஸ்தீன தூதரும் போய் இருந்தார்.!
4.தற்போது இலங்கையில் 85 அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. கடந்த ஆண்டு மட்டும் புதிதாக மேலும் ஐந்து கட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.!
5.தற்காலிகமாக நிறுத்தி வைக்கபபட்டுள்ள யாழ். சர்வதேச கிரிக்கட் மைதானப் பணிகள் மீண்டும் விரைவில் துவங்கும் அமைச்சர் டாக்டர் நளின் ஜயதிஸ்ஸ.!
6.ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான முக்கிய செயல்பாட்டாளர் என்று நம்பப்படுகின்ற சுரோஸ் சலே கைதாகி இருப்பது இந்த வழக்கில் திருப்பு முனையாகலாம்.!
7.வெலிகம ரி15 ஹோட்டலுக்கு தேசபந்து தேவைக்காக துப்பாக்கி சூடுநடாத்திய 2வது சந்தேக நபரான பொலிஸ் ஐ.பி. நிசந்த விமான நிலையத்தில் கைது.!




