நஜீப்
நன்றி: 04.10.2026 ஞாயிறு தினக்குரல்
1.அடுத்த மொட்டு கூட்டம் மாத்தறையிலா அல்லது குருணாகலையிலா தலைவர்கள் கலந்துறையாடல்கள். இதற்கிடையில் நாமல் விடுதலைக்கும் கடவுளிடமும் பூஜைகள்.!
2.ஊடகங்கள் முன் அன்று போர் வெற்றிக்குத் தானே மூலகாரணம். பீல்ட்மார்சலுக்கு என்ன தெரியும். என்று கேட்டா கோத்தா போர் நடவடிக்கையில் ஈடுபட்டதே இல்லை என பல்டி.!
3.ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான சஹ்ரான் அணி செய்து கொண்ட உறுதி மொழி (பையத்) தாக்குதலுக்கு முன்னைய நாள் 20.4.2019 கொழும்பில் நிகழ்ததாக பதிவாகியுள்ளது.!
4.நிறைவு பெறும் நிலையில் இருக்கும் ஜப்பான்-ஆசிய விளையாட்டுப் போட்டியில் சீனாவுக்கு 160. இந்தியாவுக்கு 12 தங்கப் பதக்கம்.! மக்கள் தொகை சமம். சிந்திக்க வேண்டி விடயம்.!
5.தமிழ் பேசும் கூட்டணி பற்றி பேச்சு மூச்சை இப்போது காணவில்லை. இது வெறும் அரசியல் நாடகம் வெகு நாளைக்கு ஓடாது என்று முன்பே ஆரூடம் சொல்லப்பட்டிருந்தது.!
6.தனது மீட்சிக்கு சிபார்சு கடிதம் கேட்டு ஞானம் அஸ்கிரிய மல்வத்த பீடாதிபதிகளிடம் அனுப்பிய தூது குடிகளின் விமர்சனத்துக்கு அஞ்சுவதால் கிடைக்காமல் போனதாம்.!
7.உலகில் 100 வயதைத் தாண்டியவர்கள் பத்து இலட்சம் வரை எனத் தகவல்கள். இதில் சிரந்தி ராஜபக்ஸ நாமமும் 222222222V படி நிச்சம் பட்டியலில் அடங்கி இருக்கும்.!



