நஜீப்
நன்றி: 13.09.2026 ஞாயிறு தினக்குரல்
1.அரசியலில் நண்பர்கள் பகைவர்கள் மாறலாம். ஆனால் பக்கத்து உறவுகள் ஒரு போதும் மாறமாட்டார்கள். இங்கு வந்திருந்த இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்.!
2.தற்போது நீதிபதிகளின் வயதை நீடிக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டில் இருக்கும் பேராசிரியர் ஜீஎல்.பீரிசும் சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் ரஜீவும் மாமன் மருமகன்களாம்.!
3.தன்னை பெரும் தலைவராக காட்டிக் கொள்ளும் திலித் ஜயவீர அனுர முஸ்லிம் பிரதேசத்திலிருந்து ஏன் ஈராண்டு விழாவை ஆரம்பிக்கின்றார் என்று கேட்கிறாராம்.!
4.ரணிலும் சகாக்களும் எதிர்காலத்தில் மொட்டுக் கட்சியுடன் தான் கூட்டணி போடுவார்கள் அவர்களது செயல்பாடுகளை கட்சிக்குள் இருந்து அவதானிப்போர் கருத்து.!
5.துறைக்குத் தலைவராக இருந்த போது சட்டத்தரணி மைத்திரி குனரத்ன நிலக்கரி இறக்குமதி விதிகளை மாற்றி அமைத்து பதினைந்து இலட்சம் யூ.எஸ்.டொலர் மோசடி செய்தாராம்.!
6.கடந்த மூன்று வருடங்களாக அரசுக்கு கிடைத்து வந்த தேசிய வருமானம் எட்டு(8)சதவீதம். இப்போது அது பதினாறு(16)சதவீதத்தையும் தாண்டி நிற்கிறது.-மத்திய வங்கி ஆளுநர்!
7.மூன்று முஸ்லிம்களை பாவித்து நாவலப்பிட்டி – தொலஸ்பாகையில் 135 ஏக்கர் தேயிலைக் காணியை யோசித்த, ரோஹித ராஜபக்ஸாக்கள் அபகரித்து மாட்டி இருக்கின்றார்கலாம்.!



