குரல் தரும் குறுஞ்செய்திகள்.

நஜீப்

நன்றி:16.08.2026 ஞாயிறு தினக்குரல்

1.ஜனாதிபதி அனுர தீர்மானங்களுக்கு மாற்றமான பீடாதிபதிகளின் கடிதத்துக்காக தனது தரப்பில் எவரும் பௌத்த பீடங்களை விமர்சிக்கக் கூடாது என ஜனாதிபதி கட்டளையாம்.!

2.ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் துவான் சுரோஸ் சலேயிடம் உண்மைகளை கோட்டறிய நவீன யுக்திகள். இதற்காக ஐந்து மனநல வைத்திய நிபுணர்களும் நியமனமாம்.!

3.நீதிபதிகளின் பதவிக் காலத்தை நீடித்தால் ஜனாதிபதி பதவி பறிபோய்விடும். இப்படி முதலைக் கண்ணீர் வடிக்கின்ற சட்டத்தரணிகள் தேர்தலில் அனுராவை எதிர்த்தவர்களாம்.!

4.மாகாண சபை தேர்தலை நடாத்துவதாக இருந்தால் எல்லை நிர்ணயம், வட்டார பிரதிநிதி, மகளிர் பிரதித்துவம் தீர்க்க வேண்டியுள்ளது. -அமைச்சரவை பேச்சாளர் நளிந்த.!

5.பீடாதிபதிகள் ஜனாதிபதிக்கு அனுப்பிய சர்ச்சைக்குரிய கடிதத்தை வடிவமைத்ததே ஜனாதிபதி தீர்மானத்துக்கு எதிராக போர் பிரடகடணம் செய்திருக்கும் சட்டத்தரணிகள்தானாம்.!

6.நாட்டில் 2019 ல் நடைபெற்ற ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் 23000 குற்றச்சாட்டுக்களும் 3000 வரையிலான சாட்சிகளும் இருப்பதாக தகவல்கள் தெரிய வந்திருக்கின்றன.!

7.1953ம் ஆண்டில் நடந்த ஹர்த்தாலுக்கு 73 வருட நிறைவை முன்னிட்டு இடதுசாரிகள் ஏற்பாடுகள் பற்றிய ஊடக சந்திப்பில் வாசுதேவ அரசு ஆதரவாலர் என்று எதிர்ப்பு!

Previous Story

"තලලා තලලා මගේ කැකුල පාරේ දාලා ගියා" රටම කම්පාවූ සිදුවීම ගැන පියා සියල්ල හෙළි කරයි

Next Story

අසංවර ප්‍රවේශයකින් සාකච්ඡාවට ආපු නීතිඥ සංගමයට ජනපතිගෙන් ප්‍රතිචාර