நஜீப்
நன்றி: 07.06.2026 ஞாயிறு தினக்குரல்
1.பதினைந்து வயதுக்குக் கீழான சிறுவர் திருமணம்: மொத்தம் 3024. சிங்களவர்கள் 2200. தமிழர்கள் 511. முஸ்லிம்கள் 471. ஏனையோர் 22. குடிசன மதிப்பீடு தருகின்ற தகவல்!
2.ஈஸ்டர் தாக்குதல்: இராணுவ உளவு பிரிவு பிரேமனந்த குதலாகமவுக்கும் வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை. லசந்த கொலை தொடர்பிலும் குதலா மீது குற்றச்சாட்டுகள்.!
3.பத்தேகம விகாரைக்கு தொலைக்காட்சி பார்க்க வந்த ஒன்பது வயது சிறுமியை 66 வயது தேரர் தொடர்ச்சியாக துஸ்பிரயோகம். தேடும் போது தலைமறைவு. பின்னர் கைது.!
4.பாஜக.வுடன் சமரச முயற்சிகள் தோல்வி. திட்டமிட்ட படி தமிழகத்தில் தனிக் கட்சி துவங்குவது என்பதில் தான் உறுதியாக இருப்பதாக அண்ணாமலை தெரிவித்திருக்கிறார்.!
5.கோடாவுக்கு வெளிநாடு போக தடை.!பசிலுக்கு விமானத்தில் பயணிக்க முடியாத அளவு சீரியஸ்! சுரேஸ் சலேக்கு டசன் கணக்கான நோயும் தற்கொலை பண்ணும் மனநிலையும்.!
6.தமிழரசுக் கட்சி பாதாள உலக செயல்பாடுகள் போல போய் கொண்டிருக்கின்றது இதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கட்சியில் ஒரு தரப்பு கடுமையான விமர்சனம்.!
7.ஈஸ்டர் தாக்குதல்: சாரா ஜெஸ்மின் இறந்து விட்டார் என உறுதிப்படுத்துவதில் சுரேஸ் சலே அதீத ஆர்வம் காட்டியதாக தகவல். இதன் பின்னணி என்ன எனவும் கேள்வி.!




