நஜீப்
(நன்றி 21.09.2025 ஞாயிறு தினக்குரல்)
1.LTTE சொத்துக்களை ராஜாக்கள் தமது உடமையாக்கிக் கொண்ட தகவல்களை பட்டியல் போட்டுள்ளார் சிரிலால் பிரியந்த!
2.இருபத்தி ஆறு (26) பெயர்களில் கடவுச்சீட்டு வைத்து LTTE தலைவரான கே.பி. உலகம் சுற்றித் திருந்திருக்கின்றாராம்..!



(NOW KP)

3.இன்னும் சில தினங்களுக்குள் லசந்த கொலையாளிகள் நீதி மன்றத்தில் நிறுத்தப்படுவார்கள் என நந்தன வீரரத்ன கூறுகின்றார்.!
4.சம்பத் மனம்பேரி வலஸ்முல்ல நீதிமன்றத்தில் ஆஜரானபோது அவருக்கான சட்டத்தரணிகளை ஜொன்ஸ்டனே ஏற்பாடு செய்தாரம்.!
5.கொண்டேனருடன் எனக்குத் தொடர்பில்லை அதனை வைத்திருந்ததே எனது தவறு இது சம்பத் மனப்பேரி விடும் கதை.!
6.தான் விரும்பாத சில விடயங்களை செய்யுமாறு சிலர் உள்ளிருந்து என்னைக் கட்டாயப்படுத்தி வருகின்றார்கள்-சஜித்.!
7.பாதாள உலகத்தாரிடமிருந்து மாதாந்தம் பணம் வங்கிய அமைச்சர்கள் பட்டியலும் தன்னிடம் இருக்கின்றது- ஜனாதிபதி அணுர.!





