குரல் தரும் குறுஞ்செய்திகள்

நஜிப்

நன்றி: 05.04.2026 ஞாயிறு தினக்குரல் 

1.ஈரான்-அமெரிக்க-இஸ்ரேல் போருக்கு திமுக.தான் காரணம் என வெற்றிக் கழக தலைவர் விஜே பேசியதாக செய்தி. இந்தக் கருத்துக்கு வாசகர்தான் பதில் தரனும்.!

2.தமிழரசுக்குள் கொழும்பு மைய அரசியல்வாதிகளுக்கும் மண்ணுக்காக களத்திலிருந்த போராளிகளுக்குமிடையில் கருத்து மோதல்கள். நல்ல துவக்கம்.!

3.சிறையில் கதறும் சலே: அவரது பாட்டன் தந்தை சகோதரர்கள் மூவர் இராணுவத்தினர். குடும்ப வாழ்க்கையை கூட அவர் நாட்டுக்காக இழந்தவராம். கம்மன்பில தகவல்.!

4.சஜித் அணி அந்தர் பல்டி: வைபவத்துக்கு போனோம் என்பதற்காக புத்தகத்திற்கோ அதிலுள்ள கருத்துக்களுக்கோ எமக்கு உடன்பாடுகள் கிடையாது.-ஐமச.செயலாளர்.!

5.ரிச்சர்ட் டி சொய்சா மரண வீட்டுக்கு வந்த ஜனாதிபதி பிரேமதாச தாய் மனோராணியிடம் குற்றவாளிகளை கைது செய்து நீதி வழங்குவதாக உறுதியளித்திருதார்!

6.ஈஸ்டர் தாக்குதல்: கம்மன்பில் நூலில் புதிதாக ஏதுமில்லை. ஆனாலும் அனைத்து சந்தேக நபர்களையும் அவர் ஒரு கூரையின் கீழ் அமர்த்தியிருந்தார்.!

7.இது அமெரிக்க அறிக்கை ஒன்றின் தகவல்: இலங்கை ஊடாக ஆண்டுக்கு 45000 விமானங்கள். 35000 கப்பல்கள். 6500 எண்ணெய் தாங்கிகள் பயணிக்கின்றனவாம்.

Previous Story

පාස්කු ප්‍රහාරයේ , මහ මොළකරු බලන්න , සජිත් ගිය ඇත්ත හේතුව එළියට

Next Story

රටම කතාවෙන නිවස ගැන ලාල් කියයි ! ඒ කාලෙ හිටපු විදියට දැන් ඉන්න ඕන නෑ