குரல் தரும் குறுஞ்செய்திகள்!

நஜீப்

நன்றி: 22.03.2026 ஞாயிறு தினக்குரல்

1.இந்த கொடிய போருக்கு மத்தியில் இங்கு அரசியல் கூட்டணி பற்றி பேசுகின்ற எதிரணியினருக்கு பைத்தியம்.-முன்னாள் ஜனாதிபதி மைத்திரி.!

2.தனது திருமணத்துக்கு மின் இணைப்பு பெற்று அதனை செலுத்தாத கட்டணம் 20 இலட்சம் ரூபாவுக்கான வழக்கு மொட்டு நாமலுக்கு ஜூலை 01ம் திகதி!

3.உலக இயக்கத்தில் பெற்றோலியத்தின் பங்களிப்பு 85 சதவீதமாகவும் ஏனைய சக்திவளம் 15 சதவீதம் மட்டுமே. போர் பாதிப்புக்களுக்கு இது நல்ல சான்று!

4.போகுமிடமெல்லாம் அமைச்சர்களுக்கு எதிர்ப்பும் கூச்சலும் கல்லெறியும் என்று கதைகளைப் பரப்ப ரணில் கட்டளை. நளிந்தவை மையப்படுத்தி முதல் கதை.!

5.தனது தந்தையைக் கொன்ற துமிந்த சில்வாவை நான் தொடர்ந்தும் எதிரியாகப் பார்க்க விரும்பவில்லை. மகள் ஹிருனிக்கா பிரேமச்சந்திர அதிரடி!

6.ஈரானியர்கள் போரில் இந்தளவுக்கு திறமைசாலிகளாக இருப்பார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அவர்களுடன் போராடுவதும் கௌரவம்.-ட்ரம்ப்.!

7.சிங்கப்பூரில் ரணிலுக்கு இருதய சத்திர சிகிச்சையாம். இது வழக்கை தவிர்ப்பதற்கான அவரது நாடகம் என்றும் பரவலாக மக்கள் மத்தியில் ஒரு சந்தேகம்.!

Previous Story

යු#ද්ධය ඉවරයි උතුරු කොරියාව වැඩේ ඉවර කරයි ලෝකයක් හෙල්ලෙන ප්‍රවෘත්තියක්