நஜீப்
நன்றி:18.01.2025 ஞாயிறு தினக்குரல்
1.எம் மீது தமிழ் மக்கள் வைத்திருக்கின்ற நம்பிக்கையை நாம் ஒருபோதும் வீணடிக்க மாட்டோம் வடக்கு-வேலனையில் ஜனாதிபதி மீண்டும் உறுதி.
2.ஈரானுடன் அமெரிக்கா போர் தொடுக்குமாக இருந்தால் அண்மையில் நமக்கு ஏற்பட்ட பேரிடரைப்போல ஒரு பாரிய பாதிப்பு இதிலும் வரும்.
3.வடக்கில் ஜனாதிபதி மீது மக்கள் காண்பிக்கின்ற பாசம் தேசிய ஐக்கியத்துக்கான சிறப்பான ஒரு நம்பிக்கையின் வெளிப்பாடாக அமைகின்றது.
4.சஜித்தின் பிறந்த தினத்துக்கு ஐதேக. முக்கியஸ்தரான சாகல கட்சி சார்பில் போய் வாழ்த்து தெரிவித்தது ஒரு இராஜதந்திர ஏற்பாடாக இருந்தது.
5.யாழ். வரும் எல்லா ஜனாதிபதிகளும் தன்னிடம் வந்து ஆசீர்வாதம் பெறுவார்கள். ஆனால் ஜனாதிபதி அனுர வரவில்லை. நயினாதீவு தேரர் ஆதங்கம்.!
6.இப்போது எதிர்க்கட்சித் தலைவர் விமல் வீரவன்சதான். அவர்தான் பிரதமரை விரட்டியடித்திருக்கின்றார். இது ரணில் விடும் புதிய டயல்.!
7.எதிரணியினர் கூட்டங்களுக்கு வருவது விளம்பர நோக்கங்களுக்காக, அதனால்தான் அவர்கள் அங்கு ஏதாவது ரகலை செய்கிறார்கள்-ஹதுன்ஹெத்தி!





