நஜீப்
நன்றி:11.01.2025 ஞாயிறு தினக்குரல்
1.நாடாளுமன்ற உறுப்பினரின் பென்சனை நிறுத்தினால் தற்கொலை தாக்குதல் நடக்கும்-நந்தன குணதிலக.அப்போ நடமாடவது ஜாக்கிரதை!
2.எதிரணியில் இன்று நாமல் ஜொலிப்பதால் அரசியல் அரங்கில் சஜித் காணாமல்போய் இருக்கின்றார்-மொட்டு பேச்சாளர் எதிரிமான!
3.அப்பனைக் கொன்றவனையும் கொல்ல முயற்சி செய்தவனையும் அரவணைக்கும் மனசுள்ள பிள்ளைகள்-ஹிருனிகாவும் நாமலும்!
4.நான் வாழ்க்கையில் ஒருபோதும் ஜேவிபி.தலைவர் றோஹன விஜேவீரவை சந்தித்தது கிடையாது. இது விமல் வீரவன்ச பதிவு!
5.ஐமச. இருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களே சஜித்தின் தலைமையை ஏற்க தயாராக இல்லை.-அஜித் மனப்பெரும அதிரடி!
6.ஹரினியை பிரதமர் பதவியிலிருந்து தூக்க முதல் கையொப்பம் போட்டாராம் எதிரணி தலைவர் சஜித். அரசின் கதை குளோஸ் போலும்.!
7.நாடாளுமன்ற உறுப்பினர்களின் பென்சன் தடை வந்திருப்பதால் எவராவது நீதிமன்றம் போய் மீண்டும் ஒரு முயற்சியைப் பண்ணலாம்!





