
இன்று கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும் பொதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முன்னணி சோசலிச கட்சியின் உறுப்பினர் துமிந்த நாகமுவின் கூற்றை மோற்கோள் காட்டியே திஸ்ஸ குட்டியாராச்சி ஜனாதிபதி தொடர்பிலான கருத்தை தெரிவித்தார்.
பகிரங்க மன்னிப்பு
அது அவரின் கருத்தல்ல. எமக்கு எதிரான பொய்க் குற்றச்சாட்டுக்கள் சமீப காலமாக அதிகமாக பரப்பப்பட்டு வந்துள்ளன. அவற்றுக்கு எதிராக நாங்கள் ஏன் வழக்கு தொடரவில்லையென சமூகத்தில் எமக்கெதிரான கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தொடர்பாக தான் தெரிவித்த அவதூறு கருத்துக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு தெரிவிப்பதாக திஸ்ஸ குட்டியாராச்சி கூறியுள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி நேற்று (29) கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் அறிவித்தார்.
10 பில்லியன் ரூபாய் இழப்பீடு கோரி அநுரகுமார திசாநாயக்க தாக்கல் செய்த அவமதிப்பு வழக்கு, கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்து கொண்ட போதே, திஸ்ஸ குட்டியாராச்சி தனது சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றத்தில் இவ்வாறு அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.





