காலி முகத்திடல் வன்முறையின் பின்னணியில் மகிந்த!-அநுர 

காலி முகத்திடலில் நடத்தப்பட்ட போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டமைக்கு முழுமையாக பொறுப்புக் கூறவேண்டியது மகிந்த ராஜபக்சதான் என  மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 

அவர்தான் வன்முறையை ஏற்படுத்திய காடையர்களை அலரிமாளிகைக்கு வரவழைத்திருந்தார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

காலி முகத்திடல் வன்முறையின் பின்னணியில் இவர்தான்! அநுர பகிரங்க அறிவிப்பு

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு அங்கு  மதுபானமும், பொல்லுகளும் வழங்கப்பட்டு அவர்கள்  ஏவிவிடப்பட்டுள்ளனர். அதற்கு ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சனத் நிஷாந்த உள்ளிட்ட உறுப்பினர்கள் காரணமாக உள்ளனர்.

பின்னர் தான் ‘மைனா கோ கம’ மற்றும் ‘கோட்டா கோ கம’ மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனை தடுக்க வேண்டிய பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் உரிய முறையில் செயற்பட்டிருக்கவில்லை.

ஆகவே பொலிஸ் மா அதிபர், பாதுகாப்புச் செயலாளர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்டவர்களும் பொறுப்புக் கூற வேண்டியவர்களே.

காலி முகத்திடல் வன்முறையின் பின்னணியில் இவர்தான்! அநுர பகிரங்க அறிவிப்பு

ஒருமாதகாலமாக ஜனநாயக முறையில், அமைதியாக முன்னெடுக்கப்பட்ட எமது இளையோர் அணியினர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த இளையோரும் பேதங்களை மறந்து ஒரே இலக்கிற்காக இணைந்திருக்கின்றனர்.

அப்போது எந்தவிதமான முரண்பாடுகளும் ஏற்படாத நிலையில் அலரிமாளிகையில் ஏவிவிடப்பட்டவர்கள் தான் வன்முறைகளுக்கு காரணமானார்கள். உயிர்களை பலியெடுத்து, சொத்துக்களுக்கு சேதம் விளைவித்து தீக்கிரையாக்கினார்கள். மாற்றுத்திறனாளிகள், பெண்கள் என்று கூடப்பார்க்காது தாக்குதல் நடத்தியுள்ளார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

Previous Story

பசிபோக்க புலம்பெயர் தமிழர்களுக்கு பிரதமர் அழைப்பு! ஒரு கேள்வி:ஐயா புலி முத்திரை இன்னும் நீடிக்கின்றதா!

Next Story

இலங்கையால் மலோசியாவில் நெருக்கடி!