காபூலில் குண்டுவெடிப்பு: ஆப்கன் அமைச்சர் பலி

ஆப்கன் தலைநகர் காபூலில் நடந்த குண்டுவெடிப்பில், அந்நாட்டின் அகதிகள் விவகாரத்துறை அமைச்சரும், ஹக்கானி அமைப்பின் நிறுவனரின் சகோதரருமான கலில் உர்- ரஹ்மான் ஹக்கானி உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

Latest Tamil News
இது குறித்து அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது: அமைச்சரவை அலுவலகத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில், ஹக்கானி மற்றும் அவருடன் இருந்த சிலரும் கொல்லப்பட்டனர். இத்தாக்குதல் தற்கொலைப்படை தாக்குதல் என தெரியவந்துள்ளது.

2021 இல் தலிபான் அமைப்பினர் ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தை கைப்பற்றியதில் இருந்து தாக்குதல் சம்பவங்கள் குறைந்துள்ளன. இருப்பினும் ஐ.எஸ்., பயங்கரவாதிகள் அமைப்பு அந்நாட்டில் செயல்பட்டு வருகிறது. இந்த பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள்,

பொதுமக்கள், வெளிநாட்டவர்கள் மற்றும் தலிபான் அமைப்பினரை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இன்று நடந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பு ஏற்காவிட்டாலும், இவர்கள் தான் காரணமாக இருக்கும் என்ற சந்தேகம் உள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Previous Story

சிரியாவில்  இஸ்ரேலிய தாக்குதல்!

Next Story

ஐயோ.. நேர்ல கூட பார்க்கலை.. பக்கத்து ரூமிலிருந்தே அடுத்த அறையிலிருந்த பெண்ணை கர்ப்பமாக்கிய இளைஞர்