நஜீப்
நன்றி:01.03.2026 ஞாயிறு தினக்குரல்
கடும் இனவாதியாக இருந்து தற்போது கோமாளியாக மாறி இருக்கின்ற சர்ச்சைக்குரிய ஞானசார தேரர் பௌத்த பேரணிக்கும் போய் இருந்தார். இன்று பௌத்த தேரர்களுக்கு நாட்டில் பெரும் நெருக்கடி. அவர்கள் அவமானப்படுத்தப்பட்டு வருகின்றார்கள்.
எனவே இதற்கு சட்ட நடவடிக்கை எடுக்க எவரும் இன்று நாட்டில் இல்லை. எனவே நான் தேரர்களை விமர்சிக்கின்ற சமூக ஊடகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க போகின்றேன். எனவே அதற்காக எனக்கு காசு கொடுத்து உதவுமாறு அவர் பகிரங்க வேண்டுகோள் விடுத்து வருகின்றார்.
எல்லோரும் பேசுகின்றார்கள் ஒருசதம் கூட தருகின்றார்கள் இல்லை. இதிலுள்ள வேடிக்கை என்னவென்றால் ஒரு தனியார் நிறுவம் அந்தப் பணத்தை தமது அமைப்பின் பெயரில் அனுப்பினால் வழங்கப்படும் தொகைகளை இரட்டிப்பாக ஞானசாரத் தேருக்கு வழங்க முன் வந்திருப்பதாகவும் சொல்லப்படுகின்றது.? இது என்ன வேடிக்கையான செய்தி.!





