கலாநிதி கிழக்கு முதல்வர்…!

நஜீப்

நன்றி:19.07.2026 ஞாயிறு தினக்குரல் 

கொள்கை ரீதியில் ஜேவிபி. அரசியலுக்கு மாகாண சபைத் தேர்தலில்  உடன்பாடு கிடையாது. ஆனால் புலிவால்போல அதிலிருந்து விடுபடுவதும் சாத்தியமில்லை. அதனால்  ஜூன்-ஜூலையில் தேர்தல் என்ற நிலையில் தித்வா ஈரான் போர் என்பவற்றால் அது சாத்தியமாகவில்லை.

ஆனாலும் நாம் நெடுநாளாக குறிப்பிடுவது போல இப்போது என்பிபி. தலைவர்களும் விரைவில் தேர்தல் என்று இன்று பேசுகின்றார்கள். தெற்கில் ஆளும் தரப்புக்கு பெரும் போட்டிகள் வராது. இது நமது கணிப்பு.

சஜித் நாமல் அணிகள் தனியாக வருவார்கள். சில்லறை கூட்டணிகளும் வரும். வடக்கு கிழக்கில் ஆளும் என்பிபி. தமிழ் முஸ்லிம் அணிகளுக்கு நல்ல போட்டியாளராக இருப்பார்கள். வடக்கு-தமிழசு முதல்வர் வேட்பாளராக சுமந்திரம் வரலாம்.செல்வாக்கை நமக்கு மதிப்பிட முடியாதுள்ளது.

கிழக்கில் ஹஸ்புல்லா சமூகத்துக்கு பொருத்தமான வேட்பாளர். ஆனால் மு.கா. தலைமை கலாநிதியை ஜீரணிக்குமோ தெரியாது. அதாவுல்லாவை கொண்டு வந்து களத்தை சிதைக்கவும் வாய்ப்புக்கள் உண்டு.

Previous Story

CD මරණයට පෙර කතරගම ගිහින් ! නිල ඇඳුම ඉරා කැළණි ගඟට දාලා ! මහනායක හිමිනම ඉල්ලා අස්වෙයි

Next Story

වෙඩිකෑ පොලිස්පතිගේ තවත් රහසක්. ටිරාන් අලස්ට ලක්ෂ 7000 ක් අල්ලස් දුන්, ඇමති මාමා මරලා