நஜீப்
நன்றி: 07.06.2026 ஞாயிறு தினக்குரல்
வருகின்ற மாகாணசபைத் தேர்தலில் அனுர தலைமையிலான என்பிபி ஒரு மகாணசபையையாவது வெற்றி கொள்ளுமாக இருந்தால் தான் அரசியலில் இருந்து நிரந்தரமாக வெளியேறுவதாக சவால் விட்டிருக்கின்றார் உதய கம்மன்பில.
இது போன்று மனிதனின் எத்தைனையோ சவால்களை நாடு பார்த்திருக்கின்றது. அவற்றை ஊடகங்கள் அவ்வப்போது எடுத்துச் சொல்லி இருக்கின்றது. அவை பற்றி இவருக்கு கவலை கிடையாது.
இந்த கம்மன்பில புதிதாக விடுத்திருக்கின்ற இந்த சவால்பற்றி எவரும் கண்டு கொள்ள மாட்டர்கள். ஆனாலும் இதன் மூலம் ஊடக விளம்பரங்களை தேடிக் கொள்ள முடியும். இந்த நாட்டில் கம்மன்பில ஒரு வங்குரோத்து அரசியல்வாதிதான்.
எனவே இந்த அரசியல் துறப்பு என்பது வெறும் நாடகம். அவர் சொல்வதற்கு மாற்றமான முடிவுகள் வந்து என்பிபி. சாதித்தால் நான் அப்படிச் சவால் விட்டிருக்காவிட்டால் இவர்கள் தேர்தலை நடாத்தி இருக்க மாட்டார்கள். அதனால்தான் அப்படி சொன்னேன் என்று சொல்லவும் இடமிருக்கின்றது.





