நான் உறுதி மொழி தருகின்றேன்.
திசம்பரில் சஜித் ஜனாதிபதி

-நன்றி கார்டியன் நியூஸ் மேல் தின (01.05.2025) இசு
-கபீர் ஹாசீம்.!
(சொன்னவரையும் கதையை நம்புவோரையும் கண்ட இடத்தில் பிடித்து 103 வசுவண்டியில் ஏற்றி அனுப்பி விடுங்கள். குடி மக்களை இவர்கள் என்னதான் நினைத்துக் கொண்டு இப்படியான கதைகளை சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்?)
கபீரின் இந்தக் கருத்தை சஜித் அடியோடு நிராகரித்ததுடன் இதற்கான நியாயங்களையும் சொன்னார். 159 பெரும்பான்மை இருக்கின்ற அரசாங்கத்தை அப்படி விரட்ட முடியாது என்பது அவரது வாதமாக இருந்தது.
அத்துடன் அர்ஷ டி சில்வா பொருளாதாரக் கருத்துக்களையும் சஜித் ஏற்றுக் கொள்ளவில்லை. மேலும் இரான் விக்கிரமரத்தவை கொழும்பு முதல்வர் வேட்பாளரதக நியமனம் செய்வதிலும் அவருக்கு உடன்பாடு இல்லை என்பதும் அந்த விவாதத்தில் தெரிந்தது.
அவரது நிலைப்பாடு தெளிவாக இருந்தது. ஆனால் இம்டியாஸ் விவகாரத்தில் அவர் கொடுத்த பதில் மலுப்பலாக இருந்தது.





