கனிசமான மு.கா.வேட்பாளர்களை ஹக்கீம் வெளிவேற்றி விட்டார்!

-நஜீப் பின் கபூர்-

தனது வார்த்தைகள் செயல்களினால் டசன் கணக்கான மு.கா. வேட்பாளர்களை உள்ளூராட்சி மன்றத் தேர்தல் களத்திலிருந்து வெளியே தள்ளிவிட்டார் தலைவர் ஹக்கீம்.

இவன் எல்லாம் ஒரு சமூகத் தலைவனா என்று சமூகம் விசனம் கொள்வதே இந்தப் பின்னடைவுக்குப் பிரதான காரணம்.

சம்மாந்துறையில் அவரது ஏலனப் பேச்சு கட்சி மட்டத்திலும் மக்கள் மத்தியிலும் பெரும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. இது தவிர அவரது தனிப்பட்ட செயல்பாடுகளே இவனையா நாம் இதுவரை ஒரு தலைவன் என்று வைத்துக் கொண்டிருந்தோம் என்று எல்லா இடங்களிலும் கடும் விமர்சனங்கள். என்றாலும் கைக்கூலிகள் அவற்றுக்கும் நியாயம் சொல்ல முயல்வதுதான் வேடிக்கை.

இதனால் நல்ல வெற்றி வாய்ப்பு இருந்த பல வேட்பளார்களும் சிறந்த செயல்பாட்டாளர்கள் பலரும் இன்று தமக்கிருந்த நல்ல வாய்ப்பை இழந்திருக்கின்றார்கள். நமது இந்தக் கணிப்பை தேர்தல் முடிவுகளில் பார்க்க முடியும்.

இதனால் பிரச்சார நடவடிக்கைகளுக்கும் அவர்கள் இந்த முறை தமது மேடைகளுக்குக் கூட தலைவரை அழைக்கவில்லை.

இதன் பின்னரும் இந்த தலைவரை வைத்துக் கொண்டு மு.கா.பயணம் போக முயன்றால் இன்று அரசியலில் காட்சிப் பொருளாக வந்திருக்கும் இலங்கை கம்யூனிஸக் கட்சி மற்றும் சமசமஜக் கட்சி நிலைதான் தலைவர் அஸ்ரஃப் கொடுத்த இந்த மு.காவுக்கு-முகவரிக்கு நடக்கும் என்று நாம் சொல்லி வைக்கின்றோம்.

குறிப்பாக கிழக்கு முஸ்லிம்களே சிந்தித்துப் பாருங்கள்.

Previous Story

யாரிந்த இஸ்திஹார்!

Next Story

நமது கருத்துக்கான அங்கிகாரம் ...!