கண்டி – கொழும்பு பிரதான வீதி விபத்து! உயிரிழந்தவர்கள்

கேகாலை – ரங்வல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்த சம்பவத்தில் சந்தேகத்திற்குரிய வான் சாரதியை எதிர்வரும் செப்டெம்பர் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கேகாலை பதில் நீதவான் ​மெல்கம் மசாடோ உத்தரவிட்டுள்ளார்.

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் கேகாலை, ரணவல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 3 பேர் உயிரிழந்திருந்தனர்.

இந்த விபத்தில் துல்ஹிரிய மற்றும் வெயங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய மொஹமட் மிஃப்லால், மொஹமுஸ் ரஹூம் மற்றும் மொஹமட் மனாசிக் ஆகிய மூவர் உயிரிழந்திருந்தனர்.

விபத்திற்கான காரணம்

20 வயதுடைய இளைஞரொருவர் ஓட்டிச்சென்ற வான் ஒன்று வீதியின் மறுபுறம் வந்த மூன்று மோட்டார் சைக்கிள்களுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் இருந்து கண்டி நோக்கி பயணித்த வான் ஒன்று வீதியின் எதிர் திசையில் வந்த மூன்று மோட்டார் சைக்கிள்களுடன் மோதி விபத்துக்குள்ளானது.

கண்டி - கொழும்பு பிரதான வீதியில் கோர விபத்து! உயிரிழந்தவர்கள் குறித்து வெளியான தகவல் | Accident On Kandy Colombo Main Road

இந்த விபத்தில் மூன்று மோட்டார் சைக்கிள்களின் ஓட்டுனர்கள் மூவரும் பின்னால் பயணித்த இருவருமே படுகாயமடைந்து கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்கள் இருவரும், பின்னால் பயணித்த ஒருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்த மேலும் இருவர் கேகாலை ஆதார வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தெமட்டகொட பிரதேசத்தை சேர்ந்த 20 வயதுடைய வான் சாரதியின் கவனக்குறைவே விபத்திற்கான காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Previous Story

ராணிக்கும், மன்னருக்கும் டிரைவிங் லைசென்ஸ் பாஸ்போர்ட் தேவையில்லை

Next Story

குற்றவாளிகளை தண்டிக்கவும்!