கட்சியை ஒன்றிணைப்பேன்: பிரதமர் பதவிக்கான போட்டியாளர் பென்னி மோர்டான்ட் வாக்குறுதி

நான் புதிய குரலாக கட்சியை ஒன்றிணைப்பேன் என முன்னணி பிரித்தானிய பிரதமர் போட்டியாளரான பென்னி மோர்டான்ட் அறிவித்துள்ளார்.

லிஸ் டிரஸ் தலைமையிலான அரசாங்கத்தின் தவறான பொருளாதார திட்டங்களால் நாட்டின் சந்தை மோசமான சரிவை சந்திக்க தொடங்கியது, இதையடுத்து லிஸ் டிரஸ் தலைமையிலான அரசாங்கத்திற்கு எழுந்த நெருக்கடியை தொடர்ந்து பிரதமர் லிஸ் டிரஸ் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

இதனால் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து அடுத்த பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த வாரங்களுக்குள் நடத்தி முடிக்கப்பட்டு, பிரித்தானியாவின் புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார் என கன்சர்வேட்டிவ் கட்சி அறிவித்துள்ளது.

பிரித்தானியாவின் அடுத்த பிரதமருக்கான தேர்தலில் முன்னணி போட்டியாளர்களாக முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக், முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் பென்னி மோர்டான்ட் (PennyMordaunt) இருப்பதாக தெரியவந்துள்ளது.

புதிய குரலாக கட்சியை ஒன்றிணைப்பேன்: பிரதமர் பதவிக்கான போட்டியாளர் பென்னி மோர்டான்ட் வாக்குறுதி | I Will Be A Fresh Voice And Unite The Party Penny

இந்நிலையில் கன்சர்வேட்டிவ் கட்சி மீதான நம்பிக்கையை நாம் மீட்டெடுக்க வேண்டியுள்ளது, அத்துடன் நான் புதிய குரலாக கட்சியை ஒன்றிணைப்பேன் என முன்னணி பிரித்தானிய பிரதமர் போட்டியாளரான பென்னி மோர்டான்ட் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள போஸ்டரில், நாட்டை ஒன்றுப்படுத்தவும், எங்கள் உறுதிமொழியை நிறைவேற்றி, அடுத்த தேர்தலில் வெற்றி பெறவதற்காக கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் மற்றும் நாட்டின் பிரதமர் பதவிக்கான போட்டியில் களமிறங்கியுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

Previous Story

தலை முடியை நேராக்க பயன்படுத்தும் இரசாயன பொருட்களால் கருப்பை புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகம் -புதிய ஆய்வில் தகவல்

Next Story

பதவி இழக்கும் 10 MP க்கள்