கடலில் இருந்து வந்த வேற்றுக்கிரகவாசிகள்? தீயாய் பரவும் புகைப்படம்

தென்னாப்பிரிக்காவில் கடற்கரை ஒன்றில் நிறைய கால்களை கொண்ட உருவம் வெளியே வந்ததால் அது வேற்றுகிரகவாசியாக இருக்கலாம் என கருதி பலர் இணையத்தில் அந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்கள்.

ஏலியன்ஸ் எனப்படும் வேற்றுக்கிரகவாசிகள் அவ்வப்போது பூமிக்கு வந்து செல்வதாக சொல்லப்படுகிறது. ஏலியன்ஸை திரைப்படங்களில் பார்த்துள்ளோம். அவர்கள் ஒரு தட்டு வடிவ வாகனத்தில் பூமிக்கு வருவது போல் காட்டப்படும்.

முதலில் இது போன்று ஏலியன்ஸ்கள் இருக்கிறார்களா இல்லையா என்பது விவாதத்துக்குள்ளாகியுள்ளது. பெருத்த தலை, வீங்கிய கண்கள், பார்ப்பதற்கே பயங்கரமாக காட்சியளிக்கும்.

பூமிக்கு மிக அருகே வரும் ஏலியன்ஸ் இந்த ஏலியன்ஸ்கள் நம் பூமியிலும் வாழ்கிறார்கள் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். பாகிஸ்தான் அருகே லாகூரில் கடந்த ஜனவரி மாதம் வானில் கருப்பு நிறத்தில் வளையம் போன்று ஏதோ காட்சியளித்தது.

இந்த வளையங்களை பார்த்த சிலர் வேற்றுக்கிரகவாசிகள் வந்து சென்றிருக்கலாம் என கூறியிருந்தனர். 15 நிமிடங்கள் இந்த கருவளையம் 15 நிமிடங்கள் வரை நீடித்து பின்னர் மறைந்துவிட்டது. இதற்கான அறிவியல் ரீதியிலான காரணங்கள் தெரியவில்லை.

அந்த வகையில் தென்னாப்பிரிக்காவில் ஒரு கடற்கரையிலிருந்து ஏலியன்ஸ் போல் ஒரு உருவம் வந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. தென்னாப்பிரிக்காவை சேர்ந்தவர் ஜான் வோர்ஸ்டர். இவருக்கு 62 வயதாகிறது. ஸ்டில் பெ கடற்கரையோரம் இவரது வீடு ஸ்டில் பெ கடற்கரையோரம் உள்ளது.

இவர் கடற்கரையை பார்த்துக் கொண்டிருந்த போது காலையும் மாலையும் நிறைய கால்களை கொண்ட ஒரு உருவத்தை பார்த்து உடனடியாக படம் பிடித்தார். அந்த படத்தில் உள்ள உருவம் பார்ப்பதற்கு சற்று வினோதமாக இருந்தது.

இது வேற்றுக்கிரகவாசிகளாக இருக்கலாம் என சிலர் கூறியிருந்தனர். கடலுக்குள் வந்த வேற்றுக்கிரகவாசிகள் கரை ஒதுங்கியுள்ளதாகவும் சிலர் கமென்ட் போட்டனர். ஆய்வாளர்கள் சமூகவலைதளங்களில் வேகமாக பரவிய இந்த படத்தை பார்த்த ஆய்வாளர்கள் கூறுகையில் இது ஒரு வகையான கற்றாழை செடி. காலையிலும் மாலையிலும் மங்கும் சூரிய வெளிச்சத்தில் புகைப்படம் எடுத்துள்ளதால் அந்த காற்றாழை செடிகள் ஏதோ வேற்றுக்கிரகவாசி போல் காணப்பட்டது என விளக்கம் அளித்தனர்.

வேற்றுக்கிரகவாசிகள் இல்லை எனினும் இந்த சம்பவத்தை அறிந்த பலர் ஸ்டில் பெ கடற்கரைக்கு செல்வதை தவிர்த்தனர். ஏற்கெனவே ஷார்க் என்றால் எனக்கு பயம், அதனால் கடற்கரையில் நான் குளிக்கவே மாட்டேன். இதில் ஏலியன்ஸ்கள் நடமாட்டம் வேறயா என ட்விட்டர்வாசிகள் கமென்ட் போட்டனர்.

பின்னர் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டுள்ள சேதம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவே ஜான் வோர்ஸ்டர் இந்த புகைப்படத்தை வெளியிட்டதாகவும் அதை எல்லாரும் வேற்றுக்கிரகவாசிகள் என தவறாக புரிந்து கொண்டுவிட்டதாகவும் கூறியிருந்தார். எனவே இவை வேற்றுக்கிரகவாசிகள் அல்ல, கடலில் வாழும் ஒரு விதமான கற்றாழை செடி என அவரே விளக்கியுள்ளார்.

Previous Story

வெடித்து சிதறியது உலகின் மிகப்பெரிய மீன்காட்சி தொட்டி

Default thumbnail
Next Story

இது நீதி அமைச்சர் ஆதங்கம்!