ஓய்வு பெற்ற பொலிஸ்காரன்!

-யூசுப் என் யூனுஸ்-

உலக வல்லாதிக்கம் தற்போது வேகமாக கைமாறி வருவதை அண்மைக்காலச் சம்பவங்கள் மூலம் அவதானிக்க முடிகின்றது. சீனாவின் அபரிதமான வளர்ச்சி, உக்ரைன் போரில் மேற்கு நாடுகளின் குறிப்பாக அமெரிக்காவின் பின்னடைவு. ஈரான்-சவுதி நல்லுறவு. அமெரிக்காவை விட்டு ஒதுங்கும் சவூதி. ஈரான்-துருக்கி மற்றும் ஈரான்-சவுதி இராணுவப் பயிற்சி பாதுகாப்பு உடன்பாடுகள். என்பன அமெரிக்க வரலாற்றில் சந்தித்த மிகப் பெரிய பின்னடைவுகளாகப் பார்க்கப்படுகின்றன.

ரஸ்யா, மற்றும் ஈரானுக்கு அமெரிக்க போட்ட பொருளாதாரத் தடைகள் வெற்றி பெறாமை. தொடர்ச்சியாக ஈரான் காட்சிபடுத்தும் நவீன ஆயுதங்கள்.  இன்று ரஸ்யா, சீனா, வட கொரியா, ஈரான் ஆகிய நாடுகள் உத்தியோகப் பற்றில்லாத வகையில் ஒரு இராணுவக் கூட்டணியாக செயலாற்றி வருகின்றன.

முன்பெல்லாம் இப்படியான காரியங்கள் நடக்கின்ற போது அமெரிக்க இவற்றை எல்லாம் தகர்த்தெரிந்துவிடும். ஆனால் இன்று இவற்றை வேடிக்கை பார்ப்பதை தவிர அமெரிக்காவுக்கு வேறு வழியில்லை.

சோவியத் யூனியன் பலமாக இருந்த காலத்தை விட இன்று நிலமை அமெரிக்காவுக்குப் படுபாதகமாக இருக்கின்றது. தொழிநுட்ப, பெருளாதார வல்லாதிக்கம் என்பவற்றை ஒரு தனி நாடு இதுவரை கையில் வைத்திருந்த காலம் மலையேறி விட்டது. இதனால் அமெரிக்கா யாருமே மதிக்காத ஓய்வு பெற்ற பொலிஸ்காரன் நிலைக்குத் தள்ளப்பட்டு வருகின்றது.

நன்றி: 18.06.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

தமிழருக்கு தீர்வு நாடகமே.!

Next Story

உகாண்டா: பள்ளியில் தாக்குதல் - மாணவர்கள் உட்பட 41 பேர் உயிரிழப்பு