ஓமிக்ரான்: ஒரே நாளில் டபுள் -usa

 

அமெரிக்காவில் ஆதிக்கம் செலுத்தும் கொரோனாவாக உருவெடுத்தது ஓமிக்ரான் வேரியன்ட். அமெரிக்காவில் தற்போது பதிவாகும் புதிய கேஸ்களில் 73 சதவிகிதம் ஓமிக்ரான் கேஸ்கள் ஆகும். அமெரிக்காவில் ஓமிக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. கடந்த வாரம் வரை இது வெறும் 3 சதவிகிதம் என்ற அளவிலேயே இருந்தது. அங்கு 44 மாகாணங்களில் ஓமிக்ரான் கண்டறியப்பட்டுள்ளது.

ஒரே நாளில் ஓமிக்ரான் பாதிப்பு வீதம் அமெரிக்காவில் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் தற்போது 830 ஓமிக்ரான் கேஸ்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஓமிக்ரான் பரவல்.. உலகம் முழுக்க வேகம் எடுக்கும் கொரோனா.. மீண்டும் கேஸ்கள் அதிகரிப்பு.. அச்சம்! அமெரிக்கா கொரோனா ஆனால் அங்கு ஜீன் சோதனை செய்யப்பட்ட மாதிரிகளில் 73 சதவிகிதம் மாதிரிகள் ஓமிக்ரான் என்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே உண்மையில் ஓமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை இதைவிட பல மடங்கு அதிகம் இருக்கும் என்று அந்நாட்டு மருத்துவ மற்றும் நோய் கட்டுப்பாட்டு துறை விளக்கம் அளித்துள்ளது.

அதிக ஜீன் சோதனை செய்தால் இன்னும் அதிக கேஸ்கள் கண்டறியப்படும். அமெரிக்கா ஓமிக்ரான் நியூயார்க்கில் கடந்த 24 மணி நேரத்தில் 21,908 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. இது புதிய ரெக்கார்ட் ஆகும். நியூயார்க்கில் மட்டும் 13 சதவிகித புதிய கேஸ்கள் ஓமிக்ரான் கேஸ்களாக இருக்கும் என்று அந்நாட்டு மருத்துவ மற்றும் நோய் கட்டுப்பாட்டு துறை விளக்கம் அளித்துள்ளது. டெல்டா வகை அமெரிக்காவில் இதற்கு முன் டெல்டா 87 சதவிகிதம் வரை புதிய கேஸ்களுக்கு காரணமாக இருந்தது.

தற்போது கடந்த வார புள்ளி விவரத்தின்படி 27 சதவிகித கேஸ்கள் டெல்டா காரணமாக பதிவானது. இப்போது டெல்டாவை முந்தி அமெரிக்காவில் ஆதிக்கம் செலுத்தம் கொரோனாவாக ஓமிக்ரான் உருவெடுத்துள்ளது. அமெரிக்காவில் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அங்கு புதிதாக 126,297 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா மொத்தம் அமெரிக்காவில் மொத்தமாக 52,011,887 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 828,439 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 494 பேர் பலியாகி உள்ளனர். அங்கு இதுவரை 40,662,099 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் 10,521,349 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

Previous Story

சீன தூதுவரின் பயணமும் இந்திய மீனவர் கைதும் ?

Next Story

கோலி: பவரை காட்டிய பிசிசிஐ!