ஒரு கோலில் அமைச்சு பதவி!

-நஜீப்-

தற்போது ஆளும் தரப்புக்கு சஜித் அணியில் இருந்த பலர் தாவ இருக்கின்றார்கள் என்ற கதைகளை ஊடகங்களில் பார்க்க முடிகின்றது. புதிதாக அமைச்சுக்களை வழங்குகின்ற போது இந்த அமைச்சுக்களும் பகிரப்படும் என்றும் சொல்லப்படுகின்றது.

இதில் முன்னாள் வெற்றிகரமான சுகாதார அமைச்சராக செயல்பட்ட ராஜித சேனாரத்தன அவர்களின் பெயரும் அடிபடுகின்றது. இது பற்றி அவரிடம் நேரடியாகக் கோட்டால் கடந்த காலங்களில் பதவியில் இருந்த ராஜபக்ஸாக்களின் அரசை விட சற்று முன்னேற்றகரமான ஒரு நிலை நாட்டில் காணப்படுகின்றது.

இதனை நான் எந்த இடத்திலும் சொல்வேன். இதனால்தான் எனக்கு அமைச்சுப் பதவி கிடைக்க இருக்கின்றது என்று சிலர் கதைக்கின்றார்கள். எனக்கு அமைச்சுப் பதவி தேவையாக இருந்தால் நான் எங்கும் அழைந்து திரிய வேண்டியதில்லை.

ஒரு தொலைபேசி கோலில் எனக்கு அமைச்சுப் பதவியைப் பெற்றுக் கொள்ளத் தெரியும் என்று அவர் பதில் வழங்கி இருக்கின்றார். ஏற்கெனவே நம்முடன் இருந்த இருவர் போய் இருக்கின்றார்கள். அது போன்று தேவைப்பட்டால் மூன்றாம் ஆளாக எனக்கும் அமைச்சுப் பெற முடியும் என்றும் அவர் கூறினார்.

நன்றி:13.11.2022 ஞாயிறு தினக்குரல்

Default thumbnail
Previous Story

படகேறி சிறைக்கு வரும் கூத்து!

Next Story

யசோதா - திரைப்பட விமர்சனம்