ஐயா யாருக்கு வோட்டு!

-நஜீப்-

ஈழத் தமிழ் அசியல்வாதிகள் தமது அரசியல் முதுமை பற்றியும் கட்சிப் பெருமை பற்றியும் அடிக்கடி பேசி வருவது அனைவரும் அறிந்த பழங் கதைதான். பழங் கதைகளும் ஒரு வகையில் ஏட்டுச் சுரக்காய் போன்றதுதான்.

அதற்காக வரலாற்றை நாம் கொச்சைப் படுத்த வரவில்லை. தன்னைத்தானே புகழ்பாடுகின்ற கலாச்சாரம் அரசியலுக்கும் இராஜதந்திரத்துக்கும் ஒத்துவராது.

கடந்த ஜனாதிபத் தேர்தலில் மூத்த-பழுத்த அரசியல் தலைவர்களும் கட்சிகளும் எப்படிக் கோவனத்துடன் சமூகத்தின் முன் நின்றிருந்தார்கள் என்பனை உலகமே பார்த்தது.

இது தமிழ் சமூகத்தில் மட்டுமல்ல முஸ்லிம் மற்றும் மலையகத்திலும் அதே நிலைதான்  இருந்தது. சர்வதேசம், இந்தியா, சீனா, அமெரிக்க என்பவற்றின் தேவைகளுக்காக கொள்கைகள் குப்புறச் சரிந்தன.

அதில் தவிர்க்க முடியாத நிலமைகளும் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம், ஆனால் கட்டுக் கோப்பாக இருக்கும் அரசியல் இயக்கம் என்று பெருமை பேசுகின்ற கட்சிகளே இடையன் இல்லாத மந்தைகள் போல் அங்கே வேலை பார்த்தன என்பது இன்று அனைவருக்கும் வெளிச்சமான கதைகள்.

இப்போதாவது விமோசனத்துக்கான கொள்கைகள் கோட்பாடுகள் என்ன என்று கண்டறியும் வேலையை துவங்க வேண்டும் என்பதாவது புரிகின்றதா?

நன்றி:31.07.2022 ஞாயிறு தினக்குரல்

Previous Story

UK: பிரதமர் வாய்ப்பு: லிஸ் ட்ரஸ் 90%,   ரிஷி சுனக் 10% - 

Next Story

மீராபாய் சானு கதை