‘ஐமச.’ பழம் புளிக்கிறது!

நஜீப்

நன்றி 26.10.2025 ஞாயிறு தினக்குரல்

சஜித் ரணில் இணைவில் ஐதேக.வில் இன்று முக்கிய பதவிகளில் இருக்கின்ற இரண்டாம் மட்டத் தலைவர்கள் மிகுந்த ஆர்வத்தில் இருக்கின்றார்கள்.

அதே போன்று கட்சி ஆதரவாலர்கள் என்று சொல்லிக் கொள்ளும் சில ஆயிரம் பேருக்கும் அதில் நல்ல விருப்பம் இருக்கின்றது. ஆனால் இந்தளவு ஆர்வம் சஜித் தரப்பில் இல்லை. அங்கு இருக்கின்ற சில ரணில் விசுவாசிகள்தான் இதில் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கின்றார்கள்.

ரணில் இணைப்புத் தொடர்பாக மேற்கொள்ளும் நகர்வுகளை சஜித் பலத்த சந்தேகத்துடன்தான் பார்க்கின்றார். இது யதார்த்தமானது. இரு கட்சிகளையும் இணைப்பது தொடர்பாக ரணில் மூவர் கொண்ட குழுவை நியமித்தாலும் இந்தக்குழுவை சஜித்  கண்டுகொள்வதாகத்தெரியவில்லை.

இது ரணில் தரப்புக்கும் நன்றாகப் புரிகின்றது. இதனால் அந்தப் பழம் புளிக்கும் என்பதால் என்னவோ ரணில் இப்போது ஏனைய கட்சிகளுடன் கூட்டணி பற்றிப் பேசுமாறு தனது சகாக்களிடத்தில் கேட்டிருப்பதாகத் தெரிகின்றது.

 

Previous Story

இஸ்ரேல் மீண்டு வர ரொம்ப வருஷம் ஆகும்!

Next Story

පියුමිි ගයත්‍රි ඇතුළු... පද්මේගෙන් සැප සෙවු නිළියන්ගෙ නම් සෙට් එක මෙන්න