நஜீப்
நன்றி 23.11.2025 ஞாயிறு தினக்குரல்
முன்னாள் ஜனாதிபதி ரணிலும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்தும் இணைந்தால் அதில் ரணிலுக்கு எந்தப்பதவியும் இருக்கக் கூடாது. அவர் போசகராக இருந்து கொள்ள வேண்டும். ஐதேக.வுக்கு சஜிதே தலைவராக வர வேண்டும்.
கட்சியின் செயலாளர் பதவி ரணில் தரப்பில் இருக்கின்ற ஒருவருக்கே வழங்கப்பட வேண்டும். இதனை ஏற்றுக் கொண்டால் மட்டுமே ஐதேக.-ஐமச. இணைவு சாத்தியம்.
இந்த ஆலோசணையை முன்வைக்கின்றார் தற்போது ஐதேக. ஏற்பாட்டாளராக ரணிலால் பதவிக்கு அமர்த்தப்பட்டிருக்கின்ற ஹரின் பர்ணாந்து.
இவர் ரணிலுக்கு மிகவும் விசுவாசமான ஒரு ஆள் என்பதும் குறிப்பிடத்தக்கது. சஜித் பொறுத்தமான நேரத்தில் உரிய தீர்மானங்களை எடுக்கத்தவறிய ஒரு மனிதன்.
அதனால்தான் ஐதேக.வுக்கு இந்த நிலை. அதே நேரம் தற்போதய ஜனாதிபதி அனுர ஆளுமை மிக்க ந்ல அரசியல் தலைவர்-திறமைசாலி என்பதனை தானும் ஏற்றுக் கொள்வதாகவும் ஹரின் கூறி இருக்கின்றார்.





