ஐ.நாவில்  இலங்கைக்கு எதிரான தீர்மானம்!:அலி சப்ரி வெளியிட்ட பகிரங்க அறிவிப்பு!

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள 46/1 தீர்மானம் தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத் தொடர் சுவிட்ஸர்லாந்தின் ஜெனிவா நகரில் இன்று ஆரம்பமாகியுள்ளது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், பயங்கரவாத தடைச்  சட்டத்திற்கு பதிலாக சர்வதேச விதிமுறைகளுக்கு ஏற்றவாறு தேசிய பாதுகாப்பு சட்டம் பதிலீடு செய்யப்படும்.

நிராகரிப்பதாக அறிவிப்பு

46/1 தீர்மானம் இலங்கையின் இறையான்மையை மீறுவதாக அமைந்துள்ளது. எனவே இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதி என்ற வகையில் அதனை நிராகரிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக பிரித்தானியா தலைமையிலான இணை அனுசரணை நாடுகளால் கொண்டு வரப்பட்டுள்ள 46/1 பிரேரணை கடந்த வருடம் மார்ச் மாதம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இலங்கைக்கு எதிரான இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 22 நாடுகளும் எதிராக 11 நாடுகளும் வாக்களித்திருந்ததோடு, 14 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொண்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Story

சாதனைக்கு ராஜ்ய அமைச்சு!

Next Story

இலங்கை அரசு: தொடர் தவறுகள்! அதிர்ச்சியூட்டும் பண வீக்கம்: ஐ.நா.வின் மனித உரிமைகளுக்கான செயல் உயர் ஆணையர் அறிக்கை