ஏன் இந்த மௌனம்!

தற்போது சண்டியர்கள் போல் பேசி வந்த பல அரசியல்வாதிகள் குரல் தற்போது நளிவடைந்திருப்பது போல நமக்குத் தெரிகின்றது.

ஒன்று இந்த அரசுக்கு ஆயுல் கம்மி. நாம் வீண் வம்பிழுத்துக் கொண்டால் தமது குழந்தை குட்டிகளுக்கும் தொந்தரவாகிவிடும் என்று வீடுகளில் கொடுக்கப்படுகின்ற அழுத்தங்கள்.

மற்றும் சக பிள்ளைகள் அரசியல்வாதிகள் தொடர்ப்பில் பள்ளிகளில் காட்டுகின்ற வெருப்புபான பேச்சுக்கள்-கதைகளின் தாக்கம் இதற்குக் காரணம் என்று தெரிய வருகின்றது.

மேலும் ராஜாக்களுக்குள்ளே நடக்கின்ற ஆதிக்கப் போட்டியில் யார்தான் ஜெயிப்பாரே என்ற மற்றுமொரு அச்சம் அவர்களை சற்று அமைதிப்படுத்தி வைத்திருக்கலாம். ஜனாதிபதியும் விடப்பிடியாக இருப்பதால் கிளர்ச்சிக்காரர்களும் அமைதியாகி விடார்கள் போலும்.

சில தினங்களுக்கு முன் ஒரு வைபவத்தில் தினேஷிடம் விமல் வீரவன்ச நான் இங்கு ஏதுவும் பேசமல் இருப்பது நல்லது என்று சொல்லி இருந்ததும் தெரிந்ததே. ஆனால் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி சற்றுத் தென்புடன் திரிவது தெரிகின்றது. காற்று அவர் பக்கம் என்ற நினைப்போ!

-நன்றி ஞாயிறு தினக்குரல் 09.01.2022

Previous Story

நியூயார்க் குடியிருப்பில் தீ  21 பேர் பலி

Next Story

எதிர்ப்புகளை மீறி பாக். உச்ச நீதிமன்ற நீதிபதியாகும் ஆயிஷா மாலிக்!