“எல்லா நாளும் கோலியே காப்பாற்றுவாரா”

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்த சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான ஆட்டம் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார்.

சமபலம் வாய்ந்த அணிகள் மோதும் போட்டி என்பதாலும், இந்திய அணியின் மிக முக்கியப் போட்டி என்பதாலும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதிர்ச்சியான இந்திய வீரர்கள்.. பட்டென பறந்த புகார்! கேஎல் ராகுல் மோசம் இந்த நிலையில் ரோஹித் ஷர்மா – கேஎல் ராகுல் இருவரும் சிக்சருடன் ரன் கணக்கை தொடங்கிய போது, இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று ரசிகர்கள் கம்பீரமாக அமர்ந்தனர்.

ஆனால் கம்பீரமாக எழுந்து அமர்வதற்கும் ரோஹித் ஷர்மா 15 ரன்களிலும், கேஎல் ராகுல் 9 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேற, நம்பிக்கை நாயகர்களான கோலி – சூர்யகுமார் ஜோடி இணைந்தது. காலியான பேட்ஸ்மேன்கள் விராட் கோலியும் உச்சக்கட்ட ஃபார்மில் இருப்பதால், வந்தவுடன் கவர் திசையில் பவுண்டரி அடித்து ரசிகர்களின் பயத்தை போக்கினார். ஆனால் யார் கண்பட்டதோ, அவரும் 12 ரன்களில் ஆட்டமிழக்க, பேட்டிங்கை பலப்படுத்துவதற்காக அணியில் சேர்க்கப்பட்ட தீபக் ஹூடா களமிறங்கினார்.

அவர் களமிறங்கியதை பார்த்து பலரும், அவர் எப்போது ஆட்டமிழந்தார் என்பதை பார்த்திருக்க மாட்டார்கள். ரசிகர்கள் ஏமாற்றம் கண்களை மூடி திறப்பதற்குள் ஹூடா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அதுமட்டுமல்லாமல் ஹர்திக் பாண்டியாவும் வந்த வேகத்தில் ஆட்டமிழக்க 49 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது. ஒருவர் ஆட்டமிழந்தார், அடுத்த பேட்ஸ்மேன் இருக்கிறார் என்ற நம்பி இருந்த ரசிகர்கள் மொத்தமாக ஏமாற்றமடைந்தனர்.

மைதானத்தின் தன்மை பெர்த் மைதானம் வழக்கமாக வேகப்பந்து வீச்சிற்கு சாதகமாக இருக்கும். ஏற்கனவே ஜிம்பாப்வே அணி பாகிஸ்தானை வீழ்த்தியுள்ளதால், பேட்ஸ்மேன்கள் எச்சரிக்கையுடன் ஆட வேண்டிய அவசியம் இருந்தது. ஆனால் பிட்ச்சின் தன்மையை கொஞ்சம் கூட மனதில் வைக்காமல் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ரசிகர்களை ஏமாற்றினர்.

கோலியால் தப்பித்த இந்தியா தொடர்ந்து சூர்யகுமார் – தினேஷ் கார்த்திக் ஆகியோர் களத்தில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஒவ்வொரு ஆட்டத்திலும் கோலி ஒருமுனையில் நின்று நிதானமாக ஆட்டத்தை கட்டமைத்து பின் அதிரடிக்கு மாறியதால், இந்திய அணி முக்கியப் போட்டிகளில் வெற்றிபெற்றது. ஆனால் இன்று விராட் கோலி ஆட்டமிழந்த பின்னர், ஒருவர் மாற்றி ஒருவராக ஆட்டமிழப்பது இந்திய பேட்ஸ்மேன்களுக்கு ஒரு எச்சரிக்கையாகவே அமைந்துள்ளது.

Previous Story

போதைக்கு அடிமையான வாசிம் அக்ரம்!

Next Story

“பேய்” பார்ட்டி.. மாரடைப்பில் சரிந்த மக்கள்!