எலான் மஸ்க்கை வம்பிழுக்கும் சீனா.!

விண்வெளியில் உள்ள தங்கள் ஆராய்ச்சி நிலையத்தை எலான் மஸ்க்கின் ஸ்பேக் எக்ஸ் நிறுவன செயற்கைக் கோள்கள் இருமுறை மோத வந்ததாகவும், இதுகுறித்து ஐநா சபையின் விண்வெளி விவகாரங்கள் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக சீனா கூறியுள்ளது புதிய பரபரப்பை கிளறிவிட்டுள்ளது.

உலகின் பெரும் பணக்காரர்கள் ஒருவரும் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் அதிபருமான எலான் மஸ்க் விண்வெளி ஆராய்ச்சியில் தனது பார்வையைத் திருப்பியுள்ளார். இணைய சேவையை வழங்கும் செயற்கைக்கோள்களை செலுத்துவது மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டுகள் ஆராய்ச்சியில் அவர் தொடர்ந்து தனது கவனத்தை செலுத்தி வருகிறார்.

மஸ்க் வெற்றி பெற்று வருகிறார். அவரது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஸ்டார்லிங்க் நெட்வொர்க் மூலம் இதுவரை நூற்றுக்கணக்கான செயற்கைகோள்களை ஏவியுள்ளது. இன்னும் பல செயற்கைகோள்களையும் விண்ணில் ஏவத் தயாராக உள்ளது.

சீனா புகார்

இந்த நிலையில் விண்வெளியில் சீனா அமைத்துள்ள விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் மீது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் இரு முறை மோத முயற்சித்ததாக விண்வெளி பாதுகாப்பு முகமை சீனா புகார் அளித்துள்ளது.

செயற்கைகோள்கள் மோத இருந்தது

ஆஸ்திரிய நாட்டின் வியன்னாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மன்றத்தின் விண்வெளி விவகாரங்கள் அலுவலகத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளதாகவும், ஸ்டார்லிங்க் நெட்வொர்க்கின் செயற்கைக்கோள்கள் கடந்த ஜூலை மற்றும் அக்டோபர் 21 ஆகிய இரு தினங்களில் சீன விண்வெளி ஆய்வு மையம் மீது மோத இருந்ததாகவும், ஆய்வு மையத்தின் தானியங்கி தற்காப்புக் கருவிகள் மூலம் நூலிழையில் விபத்து தவிர்க்கப்பட்டது என சீனா குற்றம் சாட்டியுள்ளது.

எலான் மஸ்க் மீது விமர்சனம்

இதுகுறித்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் உரிய விளக்கம் அளிக்க மறுத்து விட்ட நிலையில் சீனா இந்த புகாரை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டது. இதையடுத்து எலான் மஸ்க் மீது விமர்சனங்கள் குவிந்து வருகிறது. எலான் மாச்கின் செயற்கைக்கோள்கள் அனைத்துமே அமெரிக்காவின் விண்வெளி போர் ஆயுதங்கள் என சீனாவைச் சேர்ந்தவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

அமெரிக்கா மீது குற்றச்சாட்டு

எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு கொடுத்துள்ள அனுமதியால் விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள வீரர்களின் பாதுகாப்புக்கு அமெரிக்கா அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது எனவும் அமெரிக்கா பொறுப்புடன் நடந்து கொள்ளவேண்டும் என சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஸாவோ லிஜியான் கூறியுள்ளார்.

Previous Story

ஒமிக்ரான்: அதிரும் அமெரிக்கா! நிரம்பி வழியும் குழந்தைகள் வார்டு!!

Next Story

அமெரிக்காவில்: சூடு- 5 பேர் பலி