என்பிபி-ஜேவிபி தலைவர்களுக்கு!

நஜீப்

நன்றி: 19.01.2025 ஞாயிறு தினக்குரல்

அரசியல் கட்சிகள் எப்போதும் தனக்கு தோல்விகள் வரும் போது அது பற்றி ஆராய்வதுதான் சம்பிரதாயமாக இருக்கின்றது. சில தினங்களுக்கு முன் தமது தோல்விக்கான காரணத்தை ஆராய குழு அமைக்க வேண்டும் என்று இம்டியாஸ் பாக்கர் மாக்கார் சஜித்தைக் கட்டாயப்படுத்தினார்-கடிதம் கூட எழுதி வலியுறுத்தினார்.

அது இன்று வரை நடக்கவில்லை. குற்றச்சாட்டுக்கள் தனது தலையில் விழும் என்று சஜித் அஞ்சுவது இதற்குக் காரணமாக இருக்கலாம். ஆனால் நாம் இங்கு குறிப்பிடுவது தோல்விகளை மட்டுமல்ல வெற்றிகள் வருகின்ற போதும் இந்த வெற்றி எப்படித் தமக்கு கிடைத்தது என்று காட்சிகள் ஆராய வேண்டும்.

இது இன்றைய அனுர தலைமையிலான ஆட்சியாளர்களுக்கு மிக மிக அவசியமானது என்று நாம் என்பிபி-ஜேவிபி. தலைவர்களுக்கு சுட்டிக் காட்டுகின்றோம். அப்போதுதான் தனக்கு வந்த இந்த மக்கள் அங்கிகாரம் எப்படிக் கிடைத்தது. மக்கள் எதற்காக வாக்குகளை நமக்கு அள்ளிக் கொட்டினார்கள்.

இதனை நாம் எப்படிப் தொடர்ந்தும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பது புரியும். மமதையில் பயணிக்க முயன்றால் சேதாரத்தை தடுக்க முடியாது.

 

 

 

Previous Story

2023ல் 360 பத்திரிகையாளர்கள் சிறையில் அடைப்பு!

Next Story

காஸாவில் அமைதி: உணர்ச்சிமிகு தருணங்கள்!