எதிரும் புதிருமான அரசியல்!

-நஜீப்-

சிறுபான்மை மொட்டுக் கட்சித் தலைவர்கள் சஜித்துக்கு விசுவாசமாக இருந்தாலும் அந்தக் கட்சி நாடாளுமன்ற உறுப்பிரர்களில் பெரும்பாலானவர்கள் இன்று ரணிலுக்கு நெருக்கமாக இருந்து தமது பிரதேச அபிவிருத்திகளுக்காக காசு கரந்து கொண்டு இருக்கின்றார்கள்.

தற்போது சஜித் கட்சியில் இருக்கின்ற அரைவாசிப்பேர் இப்படி ஜனாதிபதி ரணிலிடம் பணம் பெற்றிருப்பது தெரிகின்றது. அது அப்படி இருக்க, புதிதாக சஜித் கட்சிகு வந்த நாலக்க கொடேஹேவாவுக்கு கம்பஹ மாவட்டத் தலைமைப் பதவி கொடுக்கக் கூடாது என்று ஒன்பது அமைப்பாளர்கள் தலைவருக்கு எழுத்து மூலம் தெரியப்படுத்தி இருக்கின்றார்கள்.

Sajith and Ranil agree to work together to address shortcomings | Colombo Gazette

இன்னும் பலர் சஜித்திடம் கேட்காமலே அவர் அமைக்கின்ற அரசாங்கத்தில் தமக்கான அமைச்சுக்களை இப்போதே உரிமை கொண்டாடும் வேடிக்கையும் ஏட்டிக்குப் போட்டியாக ஐக்கிய மக்கள் சக்தியில் நடந்து கொண்டிருக்கின்றது.

மக்கள் விரோத பிரேரனைகளுக்கு கடந்த காலங்களில் கையை உயர்த்துமாறு கட்டளை வழங்கி விட்டு அதற்கு ஒழுக்காற்று நடவடிக்கை என்றெல்லாம் தலைவர்கள் நாடகமாடியதும் தெரிந்ததே. அது போலத்தான் இவையும்.

நன்றி: 09.06.2024 ஞாயிறு தினக்குரல்

Previous Story

ஐ.எஸ் தலைவர் அல்-பாக்தாதியை சந்தேகித்த மனைவி என்ன செய்தார்? 

Next Story

குவைத் தீ விபத்தில் என்ன நடந்தது?