தற்போது நாட்டில் அமைய இருக்கின்ற 170 உள்ளூராட்சி சபைகளில் 90% வரை ஆளும் NPP. வசமாகும் என்று நாம் கூறுகின்றோம்.
தேர்தலுக்கு முன்ரே இப்படி ஒரு கருத்தை நாம் சொல்லி இருந்தது தெரிந்ததே. இன்று பண்டாரவளை மா நகரசபையும் ஆளும் தரப்பு கைகளுக்குச் சென்று விட்டது.
அங்கு…

NPP- 6
IN1- 5
SJB- 3
IN2- 1
SLPP-1
என்றுதான் அமைந்திருந்தது.
இப்படி தமக்கு வரும் அவமானங்களில் இருந்து தப்பிக்கத்தான் எதிரணி குறிப்பாக SJB. கெண்டேனர் கதையை மீண்டும் தூக்கிப்பிடிக்கின்றார்கள்.
வருகின்ற நாட்களில் மின்சாரக் கட்டணம் பற்றியும் இவர்கள் பேசிக் கொண்டிருப்பார்கள்.
பிரதான எதிரணி இன்று இடையனை இழந்த மந்தைகள் என்ற நிலையில் இருக்கின்றது. இதற்க்கிடையில் என்பிபி-ஜேவிபிக்கு இடையே பிளவு. பிரதமர் மாற்றப்பட இருக்கின்றார் என்ற கதைகள் எல்லாம் இவர்களின் ஊடகப் பரப்புரைகள் மட்டுமே.
இதனை விரைவில் குடிமக்கள் புரிந்து கொள்வார்கள். அதே நேரம் அவரவர் அறிவு மட்டங்களுக்கும் அரசியல் புரிதலுக்கும் ஏற்ப அதற்கான காலத்தை எடுத்துக் கொள்வார்கள். நிலவைப் பார்த்து நாய்குறைக்கின்ற கதையாகத்தான் இது இருக்கும்.
இதற்கிடையில் இந்த அரசாங்கத்தை ஐந்து வருடங்களுக்கு அசைக்க முடியாது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவே சில தினங்களுக்கு முன்னர் கூறி இருந்தார்.





