எஃகுத் திரை ரகசியம்!

நஜீப்

நன்றி: 09.02.2025 ஞாயிறு தினக்குரல்

ஒரு காலத்தில் ரஸ்யா அரசாங்கத்தை இரும்புத் திரைக்குள் காரியம் பார்க்கும் தேசம் என்று சொன்னார்கள். ஆனால் இன்று அந்த நிலை ரஸ்யாவிலும் கிடையாது சீனாவிலும் கிடையாது.

வடகொரியாவில்தான் இப்படி ஒரு நிலை இன்று தெரிகின்றது. ஆனால் நாம் பேசுவது நமது அரசியல் பற்றிய ஒரு செய்தி.

தற்போதய அனுர அரசாங்கம் தாரான்மை வாதத்தில் பயணிக்கின்றது. இதனால் இவர்கள் மீது ரணில் கொள்கை என்றும் ஓர் விமர்சனம் இருக்கின்றது.

ஆனால் தற்போது நாட்டில் அதிகாரத்தில் இருக்கின்ற என்பிபி.யின் முதுகொலும்பு ஜேவிபி.தான்.

அவர்கள் தற்போது நாட்டில் தமது அரச பயணத்துக்கு தடையாக இருக்கின்ற சக்திகள்-நிருவாகிகள் தொடர்பாக தமக்குள் கடுமையாக விவாதித்து வருகின்றார்கள். ஆனால் அவை பரம இரகசியங்களாக இருப்பது அவர்களது தனித்துவம்.

ஜனாதிபதி, சட்ட மா அதிபர் மற்றும் சிஐடி. அதிகாரிகளுடன் நடத்திய சந்திப்பில் இருப்புத்  திரைக்குப் பின்னால் இருக்கும் கொதிநிலை அங்கு அனலாக பறந்ததாக நமக்கு ஓர் தகவல்கள்

Previous Story

ஜனாதிபதி-சட்டமா அதிபர் சந்திப்பு!

Next Story

பிஸியான சாலையில் சட்டென சரிந்த விமானம்!