-நஜீப்-
நன்றி 10.08.2025 ஞாயிறு தினக்குரல்
தற்போது எதிரணி கட்டுப்பாட்டில் இருக்கும் பெரும்பாலான உள்ளூராட்சி சபைகளின் ஆயுள் தொடர்பாக நாம் பலமுறை பேசி இருந்தோம். உள்ளாட்சி சபையின் வரவு செலவுத்திட்டம் வரும் போது பல இடங்களில் பல்டிகள் வரும் என்ற எமது கருத்துக்கு அமைய நமது இந்தக் கணிப்பு.
ஆனால் ஒவ்வொரு சபையும் தமது ஊழியர்களுக்கு சம்பளம்-கொடுப்பனவுகள் வழங்குகின்ற போது அதில் அறுபது சதவீதத்தை தாமே தேடிக் கொள்ள வேண்டும் என்ற விதி இருக்கின்றது.
ஆனால் பல சபைகளில் இதற்கான நிதியைத் திரட்டுவதில் பெரும் நெருக்கடி இன்று ஏற்பட்டிருப்பதாக நமக்குத் தகவல்கள் வருகின்றன. எனவே இந்த சபைகள் உயிர் வாழ்வதாக இருந்தால் அரசின் தயவை நாடவேண்டி வரும்.
அப்போது அங்கு என்ன நடக்கும் என்பதனை ஒருவர் புரிந்து கொள்ள முடியும். அந்தக் காட்சிகளை விரைவில் அரங்கில் நமக்குப் பார்க்கக் கிடைக்கும்.





